ஏறாவூர் செங்கலடி பிரதேசத்தில் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இனந்தெரியாத நபர்கள் சிலர் ஏறாவூர் செங்கலடிப் பகுதியிலுள்ள வீடொன்றிற்குள் புகுந்து துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தி பெண்ணொருவரின் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.

 

இந்த சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.