தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் ஒரு பிரிவு எதிர்வரும் செப்டெம்பர் 9 ஆம் திகதி முதல் இரவு நேரத்தில் திறக்கப்படவுள்ளது.

 

இரவு ஏழு மணி முதல் பத்து மணி வரையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக தெஹிவளை மிருகக்காட்சிசாலை திறக்கப்படவுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் திருமதி தம்மிக்கா மல்சிங்க தெரிவித்தார். 

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் ஆரம்பத்தில் விலங்குகள் இருக்கும் பிரிவுகள் மாத்திரம் திறக்கப்படவுள்ளது. 

உள்ளக வீதியில் பயணிப்பதற்கு வாகன வசதி வழங்கப்படவுள்ளது. புதிய சிற்றூண்டிச்சாலையும் திறக்கப்படவுள்ளது. 

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இரவு நேரங்களில் பெருமளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதன்மூலம் நாட்டுக்கு பெரும் வருமானத்தை  பெற்றுக்கொள்ள முடியும். சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இவ்வாறான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. 

எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் பின்னவல யானைகள் சரணாயலமும் இரவு நேரத்தில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதென பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.