ஹைப்பர்ஈஸ்ட்ரோஜெனிசம் எனும் பாதிப்பிற்குரிய நிவாரண சிகிச்சை

15 Sep, 2025 | 06:22 PM
image

பாடசாலைகளில் 'ஏ' லெவல் கற்கும் மாணவிகளுக்கும், கல்லூரிகளில் உயர்கல்வி கற்கும் இளம் பெண்களுக்கும் எதிர்பாராத தருணங்களில் அவர்களுடைய தோற்றத்தில் உளவியல் ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய அளவிற்கு முகப்பருக்கள் ஏற்படுவதுண்டு.

இந்நிலையில் இதற்கு தற்போது மருத்துவ மொழியில் குறிப்பிடப்படும் ஹைபர் ஈஸ்ட்ரோஜனிசம் என்பதும் ஒரு காரணம் என கண்டறியப்பட்டு, அதற்குரிய நிவாரண சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என வைத்தியர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஈஸ்ட்ரோஜன் என்பது பெண்களின் இனப்பெருக்க அமைப்பை ஒழுங்குபடுத்தும் முதன்மையான ஹோர்மோனாகும். இது உடல் அமைப்புகளில் பாரிய பங்களிப்பை வழங்குகிறது.

ஆயுள் முழுவதும் ஈஸ்ட்ரோஜன் எனும் ஹோர்மோன் சுரப்பியில் சமச்சீரற்றத் தன்மை ஏற்படக்கூடும். குறிப்பாக பெண்கள் பருவ வயதை அடைந்த பிறகு அவர்களுடைய பாலியல் வளர்ச்சியை இத்தகைய ஹோர்மோன் தூண்டுகிறது.

அத்துடன் புரொஜஸ்டிரோன் எனும் ஹோர்மோனுடன் இணைந்து பணியாற்றி, பெண்களின் உடலை கருத்தரிப்புக்கு தயார்படுத்துகிறது . இந்நிலையில் இந்த ஹோர்மோன் சுரப்பியின் அளவில்... இயல்பான அளவை விட கூடுதலாக சுரந்தால் அவை முகப்பருக்களாக அறிகுறிகளை வெளிப்படுத்தும். 

பொதுவாக பெண்களுக்கு முகப்பரு ஏற்படுகிறது என்றால்... தோலில் அமைந்திருக்கும் செபாசியஸ் எனும்  சுரப்பியில் இயல்பான அளவை விட கூடுதலாக எண்ணெய் பசை சுரப்பது.. இது சிலருக்கு ஹைப்பர் ஈஸ்ட்ரோஜனிசம் எனும் ஹோர்மோன் இயல்பான அளவிட கூடுதலாக சுரப்பதால் உண்டாகிறது. 

வாழ்க்கை நடைமுறையில் பற்றாக்குறையுடன் வாழ்பவர்களுக்கும் நீர்ச்சத்து குறைவாக இருந்தாலும்,  தோலில் காயம் ஏற்பட்டிருந்தாலும், சில தொற்று பாதிப்புகளாலும் முகப்பரு வரக்கூடும். 

இவர்கள் வைத்தியர்களை சந்தித்து அவர்கள் பரிந்துரைக்கும் பரிசோதனைகளை மேற்கொண்டு பாதிப்பின் காரணத்தை துல்லியமாக அவதானித்து, அதற்கு ஏற்ப பிரத்யேக மருந்தியல் சிகிச்சையை மேற்கொண்டு இதிலிருந்து நிவாரணம் பெறலாம்.

அத்துடன் மீண்டும் முகப்பருக்கள் தோன்றாது இருக்க வைத்தியர்கள் பரிந்துரைக்கும் வாழ்க்கை நடைமுறை மற்றும் உணவு முறையை உறுதியாக ஆயுள் முழுவதும் கடைப்பிடிக்க வேண்டியதிருக்கும்.

வைத்தியர் தீப்தி தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமீபிக் ப்ரெய்ன் ஃபீவர் எனும் மூளை...

2025-12-10 15:21:25
news-image

குழந்தைகளுக்கு ஏற்படும் பிராங்கியோலைட்டஸ் எனும் பாதிப்பிற்குரிய...

2025-12-09 18:55:19
news-image

அனாபிலாக்ஸிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2025-12-08 17:14:24
news-image

இதய பாதிப்பிற்கான சத்திர சிகிச்சையை உறுதி...

2025-12-06 16:23:04
news-image

மைக்ரோஷியா எனும் பிறவி குறைபாட்டிற்குரிய பிரத்யேக...

2025-12-05 18:49:26
news-image

லெப்டோஸ்பிரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2025-12-04 16:03:35
news-image

நோயின் தீவிரத்தை துல்லியமாக அவதானிக்கும் தமனி...

2025-12-03 17:47:05
news-image

பாதிப்புகளை துரிதமாக கண்டறிய உதவும் நவீன...

2025-12-02 14:52:04
news-image

மூட்டு வலிக்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2025-12-01 17:53:36
news-image

மெச்சுரிஸன் சிங்கொபி எனும் சிறுநீர் கழிக்கும்போது...

2025-11-29 17:11:32
news-image

பராக்ஸிமல் சுப்ராவென்ட்ரிகுலர் டாக்கிகர்டியா எனும் சீரற்ற...

2025-11-28 17:16:53
news-image

ஒஸ்டிஜிமாடிசம் எனும் பார்வை திறன் குறைபாட்டுக்கான...

2025-11-26 17:11:25