பிரச்சனைகளை தீர்க்கும் ஜீவசமாதி வழிபாடு..!?

15 Sep, 2025 | 06:03 PM
image

இன்றைய சூழலில் எம்மில் பலரும் சூழ்நிலை காரணமாக தவிர்க்க இயலாத தருணங்களில் தவறுகளை தெரிந்தே செய்கிறார்கள். இவர்களுக்கு இது தொடர்பாக பல தருணங்களில் மனசாட்சி உறுத்துவதால்.. இதற்கு பிராயச்சித்தம் தேட வேண்டும் என தொடங்குகிறார்கள். ஆனால் அவர்களால் எதை செய்தாலும்.. அந்த தவறு செய்த எண்ணத்தில் இருந்து மீள முடிவதில்லை.

இதுபோன்ற தருணத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது சுய ஜாதகத்தின் அடிப்படையில் (ஜாதகம் இருந்தால்) ஏதேனும் பரிகாரங்களை செய்து நிவாரணங்களை பெற இயலும். ஆனால் தற்போது சூழலில் பலரும் ஜாதகங்களை பற்றி பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. இதனால் தங்களது வாழ்க்கையை மேலும் சிக்கலானதாக மாற்றி அமைத்துக் கொள்கிறார்கள். இந்தத் தருணத்தில் இதிலிருந்து மீள்வதற்கு எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் குறிப்பிட்ட ஜீவ சமாதியில் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும் என முன்னிறுத்துகிறார்கள்.

இது போன்ற தருணங்களில் உங்களது வீட்டிற்கு அருகே இருக்கும் ஜீவசமாதி அடைந்த மகான்களை அவருக்கு உரிய கிழமைகளிலோ அல்லது அவருக்கு உரிய நட்சத்திரத்திலோ அந்த ஜீவசமாதிக்கு சென்று பிரார்த்தனை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் இது தொடர்பான பயணத்தின் போதும் அல்லது ஜீவசமாதிக்கு சென்று திரும்பும் போதும்.. செல்லப்பிராணியாக கருதப்படும் வீதியோர நாய்களுக்கு அவை விரும்பும் உணவினை வழங்கிட வேண்டும்.

இன்னும் துல்லியமாக விவரிக்க வேண்டும் என்றால் .. தமிழகத்தின் உள்ள சேலம் மாநகரில் அமையப்பெற்றிருக்கும் மாயம்மா எனும் மகானின் ஜீவ சமாதிக்கு சென்று வழிபடலாம். பிரார்த்திக்கலாம். இதற்கு ஏராளமான நடைமுறை அசௌகரியங்கள் இருந்தால் ... இவருடைய புகைப்படத்தை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, உங்களுடைய வீட்டில் வைத்து வழிபட வேண்டும்.

மேலும் வழிபாட்டின் போது தீபம் ஏற்றுவதுடன் மறக்காமல் செல்லப்பிராணியான நாய்க்கு வழங்க வேண்டிய உணவுகளையும் தவறாமல்  வழங்கிட வேண்டும். இந்தப் பிரார்த்தனையை நீங்கள் மூன்று மாதம் தொடர்ந்தால்... உங்களுடைய பிரச்சனைகள் - விவரிக்க முடியாத பிரச்சனைகள் - பகிர்ந்து கொள்ள இயலாத சிக்கல்கள் - ஆகியவற்றில் இருந்து நிவாரணம் கிடைப்பதை அனுபவத்தில் உணரலாம்.

தொகுப்பு: சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சாய் பாபா வழிபாடு - சில...

2026-09-10 14:24:41
news-image

கல்வியில் வெற்றி பெறுவதற்கான சூட்சமக் குறிப்பு..!

2026-09-09 15:43:34
news-image

பணியிடத்தில் உண்டாகும் நெருக்கடிக்கான நிவாரணம்..!?

2026-09-08 17:07:00
news-image

பெப்ரவரி 29 ஆம் திகதி பிறந்தவர்களுக்கு...

2026-09-07 15:57:03
news-image

அசைவ உணவை யார் தவிர்த்திட வேண்டும்?

2026-09-05 16:50:55
news-image

ஏழரைச்சனியின் பாதிப்பிலிருந்து நிவாரணம் பெற!

2026-09-04 15:49:33
news-image

கடைசி பிறவிக்கான பிரத்யேக வழிபாடு என்ன?

2026-09-03 16:58:02
news-image

காரியத்தில் வெற்றி பெறுவதற்கான பிரத்யேக குறிப்பு..!?

2026-09-02 17:08:27
news-image

திருஷ்டி தோஷங்கள் நீங்க!?

2026-09-01 14:59:16
news-image

மாத ஊதியம் குறையாமல் நீடிப்பதற்கான பிரத்தியேக...

2026-08-31 17:31:58
news-image

ராகு கேது பெயர்ச்சிப் பலன்கள் -...

2026-08-31 14:40:21
news-image

கணவன் - மனைவி இடையே உள்ள...

2026-08-29 15:43:45