தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல்; ரவிகரன் எம்.பியின் மக்கள் தொடர்பகத்தில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுப்பு

15 Sep, 2025 | 12:07 PM
image

தியாகதீபம் திலீபனின் 38ஆம் ஆண்டு நினைவேந்தல் முல்லைத்தீவு - கள்ளப்பாடு பகுதியில் அமைந்துள்ள வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களது மக்கள் தொடர்பகத்தில் இன்று திங்கட்கிழமை (15) நடைபெற்றது.

குறிப்பாக தியாகதீபம் திலீபனின்  திரு உருவப்படத்திற்கு மலர்தூவி, சுடரேற்றப்பட்டு நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டன.

அந்தவகையில் மாவீரர் ஒருவரின் தாயாரான செ.தவராணி ஈகைச்சுடரினை ஏற்றி குறித்த நினைவேந்தலை ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்து தியாகதீபம் திலீபனின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த அஞ்சலி நிகழ்வுகளில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கலந்துகொண்டதுடன், பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை - அமெரிக்க உறவை பதிவு...

2026-07-16 07:22:12
news-image

பாலியல் கல்வியை எதிர்ப்பவர்கள் சிறுவர் பாதுகாப்பு...

2026-07-16 07:11:42
news-image

இன்றைய வானிலை 

2026-07-16 06:57:15
news-image

முன்னாள் அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிரான...

2026-07-16 06:54:40
news-image

ஊழல்வாதிகளை அடையாளங்காண முயல்கின்றன தமிழக, இலங்கை...

2026-07-16 06:51:33
news-image

அரச நிதி மோசடி விசாரணை: திறைசேரி...

2026-07-16 06:48:56
news-image

வங்கி மோசடி வழக்கு: ஜகத் மனுவர்ண...

2026-07-16 06:42:16
news-image

நிலக்கரி மோசடி நட்டத்தை மக்கள் மீது...

2026-07-16 06:34:35
news-image

கொழும்பில் வாகனத் தரிப்பிடக் கட்டணம் நிறுத்தப்படவில்லை...

2026-07-16 06:26:32
news-image

முல்லைத்தீவு மாவட்டத்தில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

2026-07-16 06:17:32
news-image

அடையாள அட்டை இல்லாத விண்ணப்பதாரர்களுக்கும் க.பொ.ச...

2026-07-16 06:14:52
news-image

இலங்கை - இந்திய கைத்தொழில் உறவுகளை...

2026-07-16 06:12:40