(செ. சுபதர்ஷனி)
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 210 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதிமிக்க தங்க பிஸ்கட்டுகளை காலணிக்குள் மறைத்து, விமான நிலையத்திலிருந்து வெளியே கொண்டு செல்ல முற்பட்ட பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விமான நிலையத்தில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடும் அதிகாரி ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 6.50 மணி அளவில் தங்க பிஸ்கட்டுகளுடன் கைது செய்யப்பட்டார். விமான நிலையத்தில் அமைந்துள்ள ஊழியர்கள் வெளியேறும் வாயிலினூடாக சந்தேகநபர் வெளியேற முற்பட்ட நிலையில் சுங்கப் பிரிவு அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தி பரிசோதித்துள்ளனர்.
இதன்போது சந்தேகநபரின் காலணிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 51 தங்க பிஸ்கட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த தங்க பிஸ்கட்டுகளை பட்டியொன்றை பயன்படுத்தி பாதத்துடன் வைத்து இருக்கமாக கட்டி அதன் மேல் காலுறையை அணிந்திருந்ததாக சுங்கப் பிரிவு தெரிவித்துள்ளது. கைப்பற்றப்பட்ட தங்கம் 5 கிலோ 941 கிராம் எடை கொண்டது எனவும் அதன் சந்தைப் பெறுமதி சுமார் 210,524,575.35 ரூபா எனவும் சுங்க அதிகாரிகளால் மதிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை சந்தேகநபர் 54 வயதுடைய நீர்கொழும்பு கந்தவ பகுதியைச் சேர்ந்த சிவில் விமான பாதுகாப்பு சேவைகள் அமைப்பின் தலைவராக கடமையாற்றிய வருபவர் எனவும் தெரியவந்துள்ளது. சந்தேகநபர் குறித்த தங்க பிஸ்கட்டுகளை விமான நிலையத்தினுள் வைத்து பிறிதொரு நபரிடமிருந்து பெற்றுக் கொண்டு அவற்றை வெளியே கொண்டு வர உதவியிருக்கலாம் எனவும், நீண்டகாலமாக இவ்வாறான குற்றச்செயல்களில் சந்தேகநபர் ஈடுபட்டிருக்கலாம் எனவும் சுங்கப் பிரிவு அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மேலும் கைதான சந்தேகநபரை நீதிமன்ற உத்தரவின் பேரில் தடுத்து வைத்து விமான நிலைய சுங்கப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM