இந்திய அணி பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

Published By: Vishnu

15 Sep, 2025 | 12:21 AM
image

14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு  நடைபெற்ற ஆசிய கோப்பை இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

குழு ஏ போட்டியாக துபாயில் நடைபெற்ற இந்தப் போட்டி முதலில் துடுப்பெடுத்தாடிய  பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 127 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

அதன்படி, 128 ஓட்டங்கள் என்ற எளிதான இலக்கைத் துரத்திய இந்திய அணி, போட்டியின் 16 (15.5) ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 131 ஓட்டங்கள் எடுத்தது.

இந்த வெற்றியின் மூலம், விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி, புள்ளிகள் பட்டியலில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.

இன்றைய வெற்றியின் மூலம், பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி மூன்று டி20 போட்டிகளில் இந்தியா மூன்றிலும் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மது அருந்தி வாகனம் செலுத்திய குற்றச்சாட்டை...

2026-07-22 14:53:25
news-image

லங்கா பிரீமியர் லீக் தொடரிலிருந்து விலகினார்...

2026-07-22 14:16:34
news-image

பங்காளாதேஷ் இன் டாக்கா இல் நடைபெற்ற...

2026-07-22 12:55:39
news-image

இந்தியாவுக்கு எதிரான 2ஆவது இளையோர் டெஸ்ட்...

2026-07-22 08:59:09
news-image

கண்டி றோயல்ஸ் 43 ஓட்டங்களால் வெற்றி

2026-07-22 08:57:13
news-image

சீ ஹோக்ஸ் அணிக்கு இறுக்கமான வெற்றி;...

2026-07-21 21:49:39
news-image

ஓய்வை அறிவித்தார் இலங்கையின் அதிவேக ஓட்ட...

2026-07-21 15:14:26
news-image

மாற்றுவீரர் டொரெஸ் மேலதிக நேரத்தில் புகுத்திய...

2026-07-20 11:08:12
news-image

16 ஆண்டுகளுக்குப் பிறகு பிபா உலகக்...

2026-07-20 05:03:51
news-image

பிபா உலகக் கிணத்தை வெலலப் போவது...

2026-07-19 14:37:01
news-image

கோல் கெலன்ட்ஸ் அணி 5 விக்கெட்களால்...

2026-07-19 13:38:29
news-image

கோல் மழை பொழியப்பட்ட போட்டியில் பிரான்ஸை...

2026-07-19 10:04:41