மட்டக்களப்பில் வீடு உடைத்து 20 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா பணம் 80 இலட்சம் ரூபா தங்க ஆபரணங்கள் திருட்டு

Published By: Vishnu

14 Sep, 2025 | 07:36 PM
image

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள புன்னைச்சோலை பகுதியில் வீடு ஒன்றின் கதவை உடைத்து உள் நுழைந்த திருடர்கள் 20 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா பணம். சுமார் 80 இலட்சம் ரூபா பெறுமதியான  33 அரை பவுன் கொண்ட தங்க ஆபரணங்களை திருடிச் சென்ற சம்பவம்  ஞாயிற்றுக்கிழமை (13) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

புன்னைச்சோலை சேமக்காலை வீதி 4ம் குறுக்கு வீதியில் சம்பவ தினமான ஞாயிற்றுக்கிழமை (13)  இரவு குறித்த வீட்டில் அனைவரும் ஆழ்ந்த நித்திரையில் இருந்துள்ளனர். இதன் போது வீட்டின் குசினி பகுதி கதவை உடைத்து வீட்டுக்குள் உள்நுழைந்த திருடர்கள் அங்கு அறைகளில் அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த 20 லட்சத்து 80 ஆயிரம் ரூபா பணம் மற்றும் சுமார் 33 அரை பவுன் கொண்ட தங்க ஆபரணங்களை திருடிச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட வீட்டு உரிமையாளர் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிசார் தடவியல் பிரிவு பொலிசார் அழைக்கப்பட்டு தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பான மேலதிக  விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50...

2026-07-19 18:52:55
news-image

விற்பனைக்கான மோட்டார் சைக்கிள்களை ஓடிப்பார்ப்பதாகக் கூறி...

2026-07-19 17:54:15
news-image

நீதியரசர்களின் பதவிக்கால நீட்டிப்பு முயற்சியை கைவிட...

2026-07-19 17:44:06
news-image

நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின்...

2026-07-19 17:32:33
news-image

18 கிலோகிராமுக்கும் அதிகளவான ஐஸ் போதைப்பொருளுடன்...

2026-07-19 17:29:40
news-image

தெஹிவளை - கல்கிஸ்ஸை பொது மயானத்தில்...

2026-07-19 17:25:55
news-image

அரச பாடசாலை கட்டிடங்களுடன் இணைந்ததாக முன்பள்ளிகளை...

2026-07-19 16:51:27
news-image

செம்மணி புதைகுழிக்குள் உட்கார்ந்த நிலையில் என்பு...

2026-07-19 16:47:25
news-image

120 பயனாளிகளுக்கு கடல் அட்டை உற்பத்திப்...

2026-07-19 16:36:04
news-image

79 இலட்சம் ரூபா பெறுமதியான சீன...

2026-07-19 16:11:11
news-image

நீரில் மூழ்கி நபர் ஒருவர் உயிரிழப்பு

2026-07-19 15:20:17
news-image

பிலியந்தலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில்...

2026-07-19 17:51:53