இலாபமடைந்த பின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஓரங்கட்டியுள்ள அரசாங்கம் - எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச

14 Sep, 2025 | 05:20 PM
image

(எம்.மனோசித்ரா)

அநீதிக்குள்ளாகியுள்ள ஆசிரியர்களாக பணியாற்றிய 16,600 அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் உரிமைகளுக்காக நாம் முன்னிற்போம். இந்த பிரச்சினையை பாராளுமன்றத்திற்கு கொண்டு வந்தபோது, இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினை அல்ல என அரசாங்கம் கூறியது. அரசியல் ரீதியாக இலாபமடைந்த பின் அரசாங்கம் இவர்களை ஓரங்கட்டியுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

கோட்டை புகையிரத நிலையத்துக்கு அருகில் நேற்று சனிக்கிழமை (13) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களாக பணியாற்றி வந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்களை நேரில் சந்திக்க சென்ற போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

இதன் போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

அநீதிக்குள்ளாகியுள்ள 16,600 ஆசிரியர்களாக பணியாற்றிய அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் உரிமைகளுக்காக நான் முன்நிற்பேன். இந்த பிரச்சினையை பாராளுமன்றத்திற்கு கொண்டு வந்தபோது, இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினை அல்ல என அரசாங்கம் கூறியது.

கடந்த அரசாங்கம் 2020 ஆம் ஆண்டில் 53,000 பட்டதாரிகளை வேலைக்கு அமர்த்தி, அவர்களில் 22,000 பேரை இலவசக் கல்வியை வலுப்படுத்த ஆசிரியர்களாக உள்ளீர்த்தது.

கோவிட்-19 தொற்று நோயின் சிரமங்களுக்கு மத்தியில் இவர்கள் சிறந்த சேவைகளை முன்னெடுத்திருந்தாலும் அதிகபட்ச வேலைகளை வாங்கிய பின்னர் அரசாங்கம்  தற்போது அவர்களை கைவிட்டுள்ளது.

5 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் இருந்தாலும், நேரடியாக இணைத்துக் கொள்ளாது, வழமையான முறைமையின் ஊடாக ஆசிரியர் சேவையில் இணையுமாறு அரசாங்கம் கூறிவருகிறது.

இந்த அனுபவம் வாய்ந்தவர்கள் நடைமுறைப் பரீட்சை எழுதி, தரம் 2.2 க்கு சேர்த்துக் கொள்ளப்பட்டு, பின்னர் மூன்று ஆண்டுகளுக்குள் முதுகலை டிப்ளோமாவை பெற சமரசம் மூலம் முடிவு செய்துள்ளதாகவும், 2005 ஆம் ஆண்டு கூட இந்த வழியில் ஆசிரியர்கள் சேர்க்கப்பட்டதால், இப்போது அவ்வாறு செய்ய முடியும். அரசியல் ரீதியாக இலாபமடைந்த பின் அரசாங்கம் இவர்களை ஒரங்கட்டியுள்ளது.

இவர்களுக்காக இன்றும் எதிர்காலத்திலும் ஐக்கிய மக்கள் சக்தி முன் நிற்கும். பிரதமரின் அமைச்சரவை யோசனைக்கமைய இளங்கலைப் பட்டம் அடிப்படைத் தகுதியாக உள்ள பதவிகளில் காணப்படும் வெற்றிடங்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, 50,000 வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்ய முடியும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே, தயவுசெய்து இவர்களுக்கு தொழில்களை வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீதிபதிகள் ஓய்வுபெறும் வயது அதிகரிப்பு ஜனநாயகத்திற்கு...

2026-08-09 17:28:02
news-image

நாமல் ராஜபக்‌ஷக்கு சிறைச்சாலைகளில் அதிக வாக்குகள்:...

2026-08-09 17:51:42
news-image

தென் கொரியாவில் மத சுதந்திரம், கருத்துச்...

2026-08-09 22:16:45
news-image

அரசியலமைப்பு திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவது...

2026-08-09 17:53:18
news-image

மாகாண சபை தேர்தல் தாமதத்திற்கு எல்லை...

2026-08-09 17:56:52
news-image

எந்தவொரு வரைவு ஆவணமும் உருவாக்கப்படவில்லை: சிறிதரனுக்கு...

2026-08-09 17:53:01
news-image

நாமல் ராஜபக்ஷ தலைமையில் புதிய அரசியல்...

2026-08-09 20:19:40
news-image

சுற்றுலா வீசாவில் வந்து சட்டவிரோதமாகப் பணியாற்றிய...

2026-08-09 18:04:26
news-image

சிறைச்சாலைகள் திணைக்களத்தின் புதிய ஊடகப் பேச்சாளராக...

2026-08-09 17:33:26
news-image

சிட்னி விமான நிலையத்தில் ஜெட்ஸ்டார், கட்டார்...

2026-08-09 17:16:31
news-image

அதிக விலைக்கு அரிசி விற்பனை: வெல்லவாயவில்...

2026-08-09 16:37:05
news-image

பொலிஸாரின் பெயரில் இணையவழி மோசடி ;...

2026-08-09 17:20:47