பின்னணி பாடகரும், நடிகருமான மனோவின் மகன் துருவன் மனோ கதையின் நாயகனாக நடிக்கும் ' வட்டக்கானல் ' எனும் திரைப்படத்தின் முதல் தோற்ற பார்வை வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான கார்த்தி மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோர் வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இயக்குநர் பிதக் புகழேந்தி இயக்கத்தில் உருவாகி வரும் 'வட்டக்கானல்' எனும் திரைப்படத்தில் துருவன் மனோ , மீனாட்சி கோவிந்தராஜன், ஆர். கே .சுரேஷ் , வித்யா பிரதீப், 'கபாலி ' விஸ்வந்த் , ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எம். ஏ. ஆனந்த் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மாரிஸ் விஜய் இசையமைத்திருக்கிறார். கிராமிய பின்னணியிலான இந்த திரைப்படத்தை எம் பி ஆர் பிலிம்ஸ் மற்றும் ஸ்கைலைன் சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் டொக்டர் ஏ. மதியழகன் மற்றும் எம். வீரம்மாள் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இதனிடையே 'வட்டக்கானல்' என்பது தமிழகத்தின் சுற்றுலா தலங்களில் ஒன்றான கொடைக்கானல் எனும் பகுதியிலிருந்து சிறிது தொலைவில் அமைய பட்டிருக்கும் நீர்வீழ்ச்சியுடன் கூடிய சிறு கிராமம் என்பதும், இந்த கிராமத்தின் பின்னணியில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தை தழுவி இப்படத்தின் கதை எழுதப்பட்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM