கட்டார் வெளிவிவகார அமைச்சர் - வெளிவிவகார பிரதி அமைச்சர் இடையில் தொலைபேசி உரையாடல்!

13 Sep, 2025 | 04:07 PM
image

(எம்.மனோசித்ரா)

வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, கட்டாரின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் சுல்தான் பின் சாத் பின் சுல்தான் அல் முரைக்கியுடன்  சனிக்கிழமை (13) இலங்கை நேரப்படி முற்பகல் 11.30 மணியளவில் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.

இதன் போது வெளிவிவகாரப் பிரதி அமைச்சர், இந்தத் தாக்குதல்கள் குறித்து இலங்கையின் கவலைகளைத் தெரிவித்ததுடன், கட்டார் அரசுக்கும் மக்களுக்கும் ஆதரவையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்தியதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

கட்டார் தலைநகர் டோஹாவில், ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர்களைக் குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இந்தத் தாக்குதலில் ஹமாஸின் தோஹா அலுவலகத் தலைவர் கலீல் அல்ஹையா உட்பட பல தலைவர்கள் இலக்கு வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தத் தாக்குதல் காசாவில் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியஸ்தம் செய்து வந்த கட்டாரின் பங்களிப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. இந்நிலையிலேயே இலங்கை தனது கரிசணையை வெளிப்படுத்தியுள்ளது.

மேலும் கட்டாரில் சமநிலையற்ற தன்மையை மேலும் அதிகரிக்கவும், பிராந்திய பாதுகாப்பை குறைமதிப்பிற்கு உட்படுத்தவும் வழிவகுக்கும், சமீபத்திய தாக்குதல்கள் குறித்து, இலங்கை ஆழ்ந்த கவலை தெரிவிப்பதாக வெளிவிவகார அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது.

குறித்த அறிக்கையில் உலகளாவிய ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச விதிமுறைகள் மற்றும் சட்டங்களை நிலைநிறுத்தி, பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நோக்கி இராஜதந்திர உரையாடலில் ஈடுபடுவதிலும், நிதானத்தைக் கடைப்பிடிப்பதிலும், அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தை இலங்கை வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2050-க்குள் ஆசியா பொருளாதார மையமாகும்; இலங்கை...

2026-07-16 16:59:30
news-image

சிறைச்சாலைத் திணைக்களத்தில் புதிய ஆட்சேர்ப்பு, சேவை...

2026-07-16 13:15:11
news-image

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்க...

2026-07-16 16:07:33
news-image

சுமந்திரனின் முன்மொழிவை தொல்பொருள் பணிப்பாளர் ஏற்றுக்கொண்டமை...

2026-07-16 16:08:27
news-image

அரசாங்கத்துக்கு எதிராக மக்களை வீதிக்கு இறங்குமாறு...

2026-07-16 16:14:53
news-image

எமது காலத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை...

2026-07-16 21:56:39
news-image

கனகராயன்குளத்தில் 14 வயது மகளை பாலியல்...

2026-07-16 21:52:12
news-image

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் : கைதிகளின்...

2026-07-16 19:10:42
news-image

இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானை தமிழக...

2026-07-16 21:33:34
news-image

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் பிரவேசிக்க அனுமதி மறுப்பு...

2026-07-16 19:10:22
news-image

செம்மணி மனித புதைகுழியில் மேலும் 6...

2026-07-16 21:19:42
news-image

தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு...

2026-07-16 19:09:32