பருவநிலை மாற்றம் காரணமாக 2015ஆம் ஆண்டு தான் உலகில் அதிக வெப்பம் பதிவான ஆண்டாக இருந்துள்ளது. 

உலகில் வெப்பம் பதிவு செய்ய தொடங்கிய 1880 ஆம் ஆண்டுக்கு பிறகு  2015ஆம் ஆண்டில் தான் புவியில் அதிக வெப்பம் உணரப்பட்டதாக நாசா தெரிவித்துள்ளது.

பூமியில் காபனீர் ஒட்சைட் மற்றும் மனிதனால் சுற்றுப்புறத்தில் கலக்கும் மாசுக்கள் போன்றவற்றால் 136 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த ஆண்டு வெப்ப நிலை பதிவானதாக கூறப்படுகிறது.  

எல் நினோ  தாக்கத்தால் 2016 ஆம் ஆண்டு வெப்பமான ஆண்டாகவே இருக்கும் என நாசா தெரிவித்துள்ளது.