‘‘வெற்­றி­பெ­று­வ­தல்ல, பங்­கு­பற்­று­தலே கருத்தில் கொள்­ளப்­படும்’’ என்­பது ஒலிம்பிக் கோட்­பா­டு­களின் தனிப்­பண்­பாகும். இந்தத் தனிப்­பண்பை மலை­யக விளை­யாட்­டுத்­துறை வீர, வீராங்­க­னைகள் செவ்­வனே பின்­பற்­று­கின்­றார்கள் என்­பது அவர்கள் சாதித்தும் மௌனம் காப்­ப­தி­லி­ருந்து தெளி­வா­கின்­றது.

நாட்டின் ஏனைய பிர­தே­சங்­களில் குறிப்­பாக தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிர­தே­சங்­களில் விளை­யாட்டு வீர, வீராங்­க­னை­களை ஊக்­கு­விக்கும் வகையில் வர்ண விருது விழா உட்­பட பல்­வேறு வைப­வங்கள் நடத்­தப்­பட்டு கௌர­விக்­கப்­பட்டு வரும் வேளையில் மலை­ய­கத்தில் சர்­வ­தேச மட்­டத்தில் வெற்­றி­பெற்­ற­வர்­க­ளைக்­கூட எவ­ருமே பொருட்­ப­டுத்­தாத நிலை இருந்து வந்­தமை வேத­னைக்­கு­ரிய விட­ய­மாகும்.


தெமோ­தரை, உடு­வரை தோட்­டத்தைச் சேர்ந்த பொன்­னம்­பலம், புஷ்­ப­நாதன், இரா­கலை, செய்ன்ற் லெனார்ட்ஸ் தோட்­டத்தைச் சேர்ந்த மனோ­கரன் ஆகியோர் சர்­வ­தேச மரதன் போட்­டி­களில் பங்­கு­பற்றி தேசத்­திற்கு புகழ்­தே­டித்­தந்த போதிலும் இதற்கு முன்னர் அவர்கள் உரிய முறையில் கௌர­விக்­கப்­பட்­ட­தாகத் தெரி­ய­வில்லை.


ஆனால் பது­ளையில் இயங்­கி­வரும் பவர் ஒவ் யூத் என்ற தமிழர் அமைப்பு பெரும் பிர­யத்­த­னத்­திற்கு மத்­தியில் இலங்கை சார்­பாக சர்­வ­தேச மட்­டத்தில் பிர­கா­சித்த இந்த மூவரில் இரு­வ­ரது முக­வ­ரி­களைக் கண்டு பிடித்து அவர்­க­ளுடன் தொடர்பு கொண்டு மலை­யக விளை­யாட்டு சம்­பி­யன்கள் என்ற விழா­விற்கு அழைத்து கௌர­வித்­தமை பாராட்­டுக்­கு­ரிய விட­ய­மாகும்.
அத்­துடன் சர்­வ­தேச மாஸ்டர்ஸ் மெய்­வல்­லுநர் போட்­டி­களில் பதக்­கங்கள் வென்ற என். சந்­திரன் (டிக்­கோயா), கே. செல்­வ­நாதன் (உட­பு­சல்­லாவை) ஆகி­யோரும் இந்த வைபத்தில் கௌர­விக்­கப்­பட்­டனர்.


மேலும், விளை­யாட்­டுத்­துறை அமைச்­சினால் வரு­டாந்தம் நடத்­தப்­படும் தேசிய விளை­யாட்டு விழா­வுக்கு முன்­னோ­டி­யாக நடத்­தப்­படும் மாவட்ட விளை­யாட்டுப் போட்­டியில் ஐந்து வரு­டங்கள் தொடர்ச்­சி­யாக பெண்­க­ளுக்­கான கரப்­பந்­தாட்டப் போட்­டி­களில் சம்­பி­ய­னான மேமலை மலைக்­குயில் விளை­யாட்டுக் கழக அணியில் இடம்­பெற்ற மேமலை தமிழ் வித்­தி­யா­லய மாண­வி­க­ளான எம். தமிழ்ச்­செல்வி, பி. பவித்­ரா­தேவி, பி. ரஞ்­சனி, கே. லசின்யா, பி. நிஸானி, எஸ். அருள்­செல்வி ஆகி­யோ­ருடன் அணி பயிற்­றுநர் என். சுந்­த­ர­ராஜும் இந்த நிகழ்வில் கௌர­விக்­கப்­பட்­டனர்.எஸ். சிவ­லிங்கம், எஸ். ஜானகி, ஆர். ரஞ்­சனி, எஸ். ஜெய­பி­ர­தீபன், எஸ். ஜெய­காந்தன், எஸ். ஜெயச்­சந்­திரன், ஆர். விஜ­ய­ரட்னம், ரீ. விஜ­ய­குமார், என். செல்­வ­நா­யகம், ரீ. திலிப்­குமார், கே. கண்­ண­நேசன். (இவர்கள் மாகாண மரதன் ஓட்­டத்தில் பிர­கா­சித்­த­வர்கள்) வி. குண­சே­கரன் (மாவட்டம். தேசிய மட்ட சைக்­கி­ளோட்டம்) என். பாலேந்­திரன். எஸ். புஷ்­ப­குமார். எஸ். மூர்த்தி. ஜீ. நோர்மன் (மூவரும் கால்­பந்­தாட்டம்). பி. ஞான­சே­கரம். எஸ். செல்­வந்­திரன் (இரு­வரும் கரப்­பந்­தாட்டம்) கே. கிருஷ்­ண­குமார். ரீ. நிரஞ்­சலா (இரு­வரும் மெய்­வல்­லு­நர்­துறை)
அகில இலங்கை பாட­சா­லைகள் விளை­யாட்டுப் போட்­டி­களில் பங்­கு­பற்­றி­ய­வர்கள்: கே. க்ளோபி (பட்­மின்டன்). ஆர். திசா­வர்னி. ஜீ. ஜன­சிகா (இரு­வரும் வலை­பந்­தாட்டம்). எஸ். நவீனா (வலை­பந்­தாட்டம். மெய்­வல்­லுநர்).ஆர். ரோய் பொஸ்னி. என். நவ­நீதன். யூ. ஜெயந்தன். பி. தினேஸ். எம். அரு­னா­கிளி. எஸ். துசாந்தன். ஜீ. கித்­சிறி (எழு­வரும் கரப்­பந்­தாட்டம்). ஆர். நிஷாந்­தினி. ரீ. பிர­வீனா. வி. ரவி. ஆர். திவா­க­ரஞ்சன். எஸ். கிருஷ்­ண­கு­மாரி. ஏ. யோக­ராஜா. எஸ். விக்­ர­ம­ராஜா. எம். ஸ்ரீதேவி. எஸ். விநோத். எஸ். சுதர்சன். எஸ். ஹஜிதா. ஜீ. கோபிநாத். எஸ். ராஜேந்­திர பிரசாத், ஏ. ஆபிரஹாம் (மெய்வல்லுனர்கள்). எஸ். சுகன்யா, வீ. கோமே­தகன். (கபடி) இவர்­க­ளுடன் றக்பி பயிற்­றுநர் எஸ். விம­லேஸ்­வ­ரனும் (அட்டன்) கௌர­விக்­கப்­பட்டார்.


இந்தக் கௌர­விப்பு விழா­வா­னது பெருந்­தோட்­டத்­து­றைக்­கென ஒரு விளை­யாட்டு விழா நடத்­தப்­ப­ட­வேண்­டி­யதன் அவ­சி­யத்தை உணர்த்­தி­யுள்­ளது எனக் கூறலாம். கௌர­விக்­கப்­பட்­ட­வர்­களில் பெரும்­பா­லா­ன­வர்கள் ஊவா மாகா­ணத்தைச் சேர்ந்தவர்கள். விரல்­விட்டு எண்­ணக்­கூ­டிய சிலர் மத்­திய மாகா­ணத்தைச் சேர்ந்­த­வர்­க­ளாவர்.


இதே­போன்று சப்­ர­க­முவ மாகா­ணத்­திலும் பல மலை­யக வீரஇ வீராங்­க­னைகள் திற­மையை வெளிப்­ப­டுத்­தியும் இலை­ம­றை­காய்­க­ளா­கவே இருக்­கின்­றனர். இலங்­கையில் எத்­த­னையோ வகை­யான விளை­யாட்டு விழாக்கள் நடத்­தப்­ப­டு­கின்­றன. மகா­வலி வலய விளை­யாட்டு விழா என்­று­கூட பெரும்­பான்மை இனத்­த­வர்­க­ளுக்கு ஒரு போட்டி நடத்­தப்­பட்டு வரு­கின்­றது. இவற்­றி­லெல்லாம் பெரு­ம­ளவில் பெரும்­பான்மை சமூ­கத்­தி­னரே வெற்­றி­பெ­று­கின்­றனர். வட மாகா­ணத்தைச் சேர்ந்­த­வர்கள் அகில இலங்கை பாட­சா­லைகள் விளை­யாட்டு விழாஇ தேசிய விளை­யாட்டு விழா ஆகி­ய­வற்றில் தங்கள் திற­மை­களை வெளிப்­ப­டுத்தி சாத­னை­க­ளுடன் வெற்­றி­பெற்­று­வ­ரு­கின்­றனர்.


ஆனால் மலை­ய­கத்தில் குறிப்­பாக பெருந்­தோட்­டத்­து­றையை சார்ந்த திற­மை­ப­டைத்த விளை­யாட்டு வீர, வீராங்­க­னை­களைப் பற்றி எவ­ருமே அக்­கறை செலுத்­து­வ­தாக இல்லை. பதுளைப் பிர­தே­சத்தைச் சேர்ந்த ஒரு சில பாட­சா­லைகள் கரப்­பந்­தாட்­டத்­திலும் மத்­திய மாகா­ணத்தில் அட்டன் பிர­தே­சத்தில் ஒரு சில பாட­சா­லைகள் கால்பந்­தாட்­டத்­திலும் பிர­கா­சித்து வரு­கின்­றன. ஆனால் தொழில்­நுட்­பத்­து­ட­னான பயிற்­சிகள், மைதான வச­திகள், சத்­து­ண­வுகள் போன்­றவை சரி­யாக கிடைக்­கா­ததால் அவர்­களால் தேசிய மட்­டத்­திற்கு செல்­வது எட்­டாக்­க­னி­யாக இருந்து வரு­கின்­றது.


எனவே பெருந்­தோட்­டத்­துறை சார்ந்த இளைஞர், யுவ­தி­களை விளை­யாட்­டுத்­து­றையில் பிர­கா­சிக்கச் செய்யும் வகையில் பெருந்­தோட்­டத்­துறை விளை­யாட்டு விழா ஒன்றை அறி­மு­கப்­ப­டுத்­து­வது வர­வேற்­கத்­தக்­க­தாகும். பெருந்­தோட்­டத்­துறை சார்ந்த பிர­தே­சங்­களைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் அரச அமைச்­சர்கள்இ பிரதி அல்­லது இரா­ஜாங்க அமைச்­சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பெருந்தோட்டத்துறை விளையாட்டு விழாவை ஆரம்பித்து வைப்பார்கள் என மலையக விளையாட்டுத்துறை ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

பவர் ஒவ் யூத் தலைவர் செனவிரத்ன மகேந்திரன், செயலாளர் அருண் வெங்கடேஸ், பொருளாளர் குணபாலன் பிரதாபன் ஆகியோரினதும் அமைப்பின் ஏனைய உறுப்பினர்களினதும் அயரா முயற்சியால் மலையக விளையாட்டு சம்பியன்கள் என்ற இந்த கௌரவிப்பு விழா நடந்தேறியமை குறிப்பிடத்தக்கது.