இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு 18 பில்லியன் ரூபாய் இலாபம்

13 Sep, 2025 | 04:25 PM
image

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) 2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாத காலப்பகுதிக்குள் 18 பில்லியன் ரூபாய் இலாபத்தை ஈட்டியுள்ளதாக அறிவித்துள்ளது.

பெட்ரோலியத் துறையை மேலும் மேம்படுத்துவதற்காகவும் பல திட்டங்களைத் தொடங்கதற்காகவும் இந்த இலாபம் பயன்படுத்தப்படுவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் நிர்வாக அதிகாரி மயூர நெத்திகுமார தெரிவித்தார்.  

எரிபொருள் தளவாடங்களை மேம்படுத்துதல் மற்றும் விமானப் போக்குவரத்து நடவடிக்கைகளை மேம்படுத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட முத்துராஜவெல முனையத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையம் வரை விமான எரிபொருள் குழாய் அமைக்கும் திட்டங்களையும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். 

அத்துடன், எரிபொருள் விநியோகத்தை மேம்படுத்தவும், விமானப் போக்குவரத்து நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கும், முத்துராஜவெல முனையத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு விமான எரிபொருள் குழாய் அமைக்கும் திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச எரிபொருள் விலைகளின் ஸ்திரத்தன்மை மற்றும் உள்நாட்டு சந்தையில் மேற்கொள்ளப்பட்ட விலை சூத்திர கொள்கை சீர்திருத்தங்கள் ஆகியவற்றின் விளைவாக இவ்வாறு இலாபமீட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, 2024 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் புதிய போட்டியாளர்களின் வருகை மற்றும் சர்வதேச சந்தை விலைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் வருவாய் மற்றும் இலாபங்கள் குறைந்திருந்தன.

அந்த சந்தர்ப்பத்தில் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் இலாபம் 68.7 சதவீதமாகக்  குறைந்து 13.6 பில்லியன் ரூபாவாகக் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இவ்வாண்டின் முதல் அரையாண்டில் ஈட்டப்பட்டுள்ள இந்த இலாபம், மீண்டும் இலாபகரமான பாதையில் செல்வதற்கான அறிகுறியாகப் பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீதிக்கான காத்திருப்பும் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது ; மனித...

2026-02-17 19:55:04
news-image

சிறந்த அரசியல் கலாசாரத்தை உருவாக்க புதிய...

2026-02-17 17:19:21
news-image

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர்...

2026-02-17 20:12:55
news-image

நமது நாட்டின் சட்ட ஆட்சி அச்சுறுத்தலுக்கு...

2026-02-17 17:18:54
news-image

இலகு ரயில் போக்குவரத்து திட்டத்துக்கு ஜைகா...

2026-02-17 18:31:47
news-image

பாடசாலைக் கட்டடங்களில் அவசர கால வெளியேற்றப்...

2026-02-17 18:28:00
news-image

பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியம் நீக்கம்: சட்டமூலம்...

2026-02-17 18:07:20
news-image

IMF முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா...

2026-02-17 18:17:29
news-image

இலங்கையின் மீளக் கட்டியெழுப்பும் திட்டம் மீதான...

2026-02-17 18:02:09
news-image

ரயில் சாரதிகள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானம்

2026-02-17 17:44:02
news-image

பலாலி அம்மன் ஆலயத்துக்குச் செல்லும் வீதியை...

2026-02-17 17:46:56
news-image

2,000 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

2026-02-17 17:30:57