பாலஸ்தீனப் பிரச்சினைக்கு அமைதியான தீர்வு காண்பது மற்றும் இரு-மாநில தீர்வை செயல்படுத்துவது குறித்த நியூயோர்க் பிரகடனத்தை ஆதரிக்கும் தீர்மானத்தை ஐ.நா. பொதுச் சபை ஏற்றுக்கொண்டுள்ளது.
நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில், காசா போருக்கு அமைதியான தீர்வை ஏற்படுத்தும் "நியூயோர்க் பிரகடனம்" மீது வெள்ளிக்கிழமை (13) வாக்கெடுப்பு நடைபெற்றது.
வாக்கெடுப்பின் முடிவுகளின் படி, தீர்மானத்திற்கு ஆதரவாக 142 நாடுகள் வாக்களித்திருந்தன. எதிராக 10 நாடுகள் வாக்களித்திருந்தன. 12 நாடுகள் வாக்கெடுப்பிலிருந்து விலகியிருந்தன.
பிரான்ஸ் மற்றும் சவுதி அரேபியாவால் முன்வைக்கப்பட்ட இந்த முன்மொழிவு, பாலஸ்தீனப் பிரச்சினைக்கு அமைதியான தீர்வு காண "இரு- மாநில தீர்வை" (Two-State Solution) செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
இது காசா போரை முடிவுக்குக் கொண்டுவர கூட்டு முயற்சிகள் அவசியம் என்றும், அதன் மூலமே நியாயமான, நீடித்த தீர்வு சாத்தியம் என்றும் கூறுகிறது.
அதேநேரம், இந்தத் தீர்மானம், ஒக்டோபர் 7, 2023 அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல்களைக் கண்டிக்கிறது.
ஹமாஸ் அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்கவும், காசாவில் அதிகாரத்தைக் கைவிட்டு, ஆயுதங்களை பாலஸ்தீன அதிகாரசபையிடம் ஒப்படைக்கவும் கோருகிறது.
ஐ.நா.வின் தகவலின்படி, 2023 முதல் காசா மீதான இஸ்ரேலியத் தாக்குதல்களில் 64,750-க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள்.
அத்துடன் பட்டினியால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதாகவும் ஐ.நா. தெரிவித்துள்ளது.

















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM