பாலங்கள் கட்டுமானத்தில் பல மோசடிகள் : மன்னார் மக்கள் விசனம்

Published By: Priyatharshan

30 Jul, 2017 | 08:23 AM
image

மன்னார் மாவட்டத்தில் தற்போது கட்டுமானப்பணிகள் இடம்பெற்றுவரும் முக்கியமான பாலங்களுக்கு 'குவாரி டஸ்ட்' பயன்படுத்தப்பட்டு வருகின்றமை தொடர்பிலும் இதனால் எதிர்காலத்தில் ஏற்படவுள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் மன்னார் மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகியோர் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் ஜப்பானிய அரசின் நிதி உதவியுடன் மண்டைக்கல்லாறு, பாலியாறு, வங்காலை,அரிப்பு, மறிச்சுக்கட்டி மற்றும் செட்டிக்குளம் ஆகிய   ஆறு முக்கிய பாலங்கள் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.

எனினும் குறித்த பாலங்கள் அமைக்கும் பணிகள் இடம் பெற்று வருகின்ற போதும் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் மோசடிகள் இடம்பெற்று வருகின்றமை தொடர்பில் மக்களும், சமூக ஆர்வலர்களும் தமது கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்.

முக்கியமாக பிரதான பாலங்களின் கட்டுமானப்பணிகளுக்கான கொங்கிரீட் கலவைக்கு ஆற்று மண் மாத்திரமே பயன்படுத்தப்பட வேண்டும்.

ஆனால் மன்னார் மாவட்டத்தில் இருந்து வடக்கு முழுவதிற்கும் ஆற்று மண் சட்டவிரோதமான முறையில் கொண்டு செல்லப்பட்டு பல ஆயிரம் ரூபா பெறுமதியில் விற்பனை செய்யப்படுகின்ற போதும், மன்னாரில் பல்வேறு  கட்டுமானப்பணிகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் மணல் மண்ணை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

ஆனால் யாழ்பபாணத்தில் இடம்பெற்றுவரும் பல கட்டுமானப்பணிகளுக்கு மன்னார் மாவட்டத்தில் இருந்து பெற்றுக்கொள்ளப்படுகின்ற ஆற்று மண்ணினை பயன்படுத்தி பாலக்கட்டுமானப் பணிகள் இடம்பெற்று வருகின்றது.

இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள 5 முக்கிய பாலங்களும், செட்டிக்குளத்தில் உள்ள ஒரு பாலமும் ஆற்று மண் இன்றி 'கற் குவாரிகள்|| உடைக்கப்படுகின்ற போது கிடைக்கின்ற 'குவாரி டஸ்ட்' ஐ பயன்படுத்தி குறித்த பாலக் கட்டுமானப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குவாரியில் பெற்றுக்கொள்ளப்படும் டஸ்டை பயன்படுத்தி இதுவரை எவ்வித பால வேலைத்திட்டங்களும் மேற்கொள்ளப்படவில்லை என தெரியவருகின்றது.

யாழ்ப்பாணத்தில் தற்போது அமைக்கப்பட்டுவருகின்ற சில பாலங்கள் மணல் மண்ணை பயன்படுத்தி அமைக்கப்பட்டு வருகின்ற போதும், மன்னார் மாவட்டத்தில் போதிய மணல் மண் இருந்தும் தென்னிலங்கை ஒப்பந்தக்காரர்களை இணைத்து குறித்த ஒப்பந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கடந்த 10 ஆம் திகதி அன்று குவாரி டஸ்டினை பயன்படுத்தி மன்னார் மாவட்டத்தில் உள்ள பாலங்களின் ஆரம்பப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. எனவே பிரதான பாலம் என்பது பல வருடங்களுக்கு மேலாக இருக்க வேண்டியதொன்று.

எனினும் மன்னார் மாவட்டத்தில் தற்போது அமைக்கப்பட்டு வருகின்ற புதிய பாலங்களின் நிலை மற்றும் கட்டுமானப்பணிகள் தொடர்பில் அரசியல்வாதிகள்,திணைக்களத் தலைவர்கள், அதிகாரிகள் தொடர்ச்சியாக அமைதி காத்து வருகின்றனர்.

மன்னார் மாவட்டத்தில் இருந்து  ஆற்று மண் யாழ்ப்பாணம் மற்றும் தென் பகுதிக்கு கொண்டு செல்கின்ற போது அமைதிகாக்கும் அதிகாரிகள் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள குறித்த பிரச்சினைகளுக்கும் அமைதி காத்து வருகின்றமை தொடர்பில் மக்கள் தமது விசனத்தை தெரிவித்துள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுவரும் பாலத்தின் தரம் குறித்து அரசாங்க அதிபர், பிரதேசச் செயலாளர்கள், திணைக்கள அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு பாலக் கட்டுமானப்பணிகளில் தரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள உரிய நடவடிக்கைகளை உடன் மேற்கொள்ள வேண்டும் என மக்கள் சார்பாகவும், சமூக ஆர்வலர்கள் சார்பாகவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலீடு, இலங்கையுடனான உறவுகளை வலுப்படுத்துவதை பிரதிநிதித்துவப்படுத்தும்...

2024-12-13 02:13:40
news-image

உதயங்க, கபிலவுக்கு எதிராக புதிய அரசாங்கம்...

2024-12-13 01:02:13
news-image

'கோட்டாபய - பகுதி 2'ஆக மாறிவிட்டாரா...

2024-12-12 17:28:10
news-image

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள...

2024-12-12 21:13:18
news-image

விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல்லை கொள்வனவு செய்ய...

2024-12-12 17:20:39
news-image

சுகாதாரத் துறையை மேம்படுத்துவதற்கு ஆசிய அபிவிருத்தி...

2024-12-12 21:12:41
news-image

சபாநாயகரின் “கலாநிதி” பட்டம் தொடர்பான சர்ச்சை...

2024-12-12 17:06:16
news-image

இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ நாட்டு...

2024-12-12 21:15:23
news-image

கலாநிதி பட்டம் தொடர்பில் சர்ச்சை :...

2024-12-12 17:04:17
news-image

உதயங்க, கபிலவுக்கு எதிராக புதிய அரசாங்கம்...

2024-12-12 19:27:14
news-image

மக்களுக்கிடையிலான இராஜதந்திரத்தின் உதாரணமாக அமைதிப்படை நிகழ்ச்சித்திட்டம்...

2024-12-12 19:23:22
news-image

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு...

2024-12-12 18:11:27