கொழும்பு கோட்டையிருந்து கண்டி நோக்கிச் செல்லும் நகர்சேர் ரயில்களின் சேவை நேரங்களில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

குறித்த நேர மாற்றங்கள் வெள்ளி மற்றும் ஞாயிறு தினங்களுக்கான நேர அட்டவணையில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

நேர மாற்றத்தின் பிரகாரம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி ஞாயிறுக்கிழமை முதல் குறித்த நேர மாற்ற அட்டவணை அமுல்படுத்தப்படுமென அத் திணைக்களம் அறிவித்துள்ளது. 

வழமையாகவுள்ள நேர அட்டவணையின் பிரகாரம் கொழும்பு கோட்டையிருந்து வெள்ளி மற்றும் ஞாயிறு தினங்களில் பிற்பகல் 5.20 மணிக்கு பயணத்தை ஆரம்பிக்கும் இல.1033 என்ற நகர்சேர் ரயில் ஆகஸ்ட் 27 ஆம் திகதி முதல் பிற்பகல் 2.20 மணிக்கு பயணத்தை ஆரம்பிக்குமெனவும் குறித்த ரயில் மாலை 5.26 மணிக்கு கண்டியை சென்றடையுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.