பொரளை இரட்டைக் கொலை ; துப்பாக்கிதாரி கைது

Published By: Digital Desk 1

13 Sep, 2025 | 10:12 AM
image

பொரளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சஹஸ்புர சிறிசர உயன மைதானத்தில் இருவரைச் சுட்டுக் கொலைசெய்த சம்பவத்தின் துப்பாக்கிதாரி என சந்தேகிக்கப்படும் நபர் தமன பிரதேசத்தில் வைத்து நேற்று வெள்ளிக்கிழமை (12) பொலிஸ் விசெட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் 10 கிராம் 710 மில்லிகிராம் ஐஸ் ரக போதைப்பொருள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொரளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சஹஸ்புர சிறிசர உயன மைதானத்தில் 07.08.2025 அன்று இருவர் சுட்டுக்கொலைசெய்யப்பட்டுள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளனர்.

இது டிதாடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில்  துப்பாக்கிதாரி தமன பிரதேசத்தில் வைத்து நேற்று செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் அம்பாறை, தமன பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர்.

சந்தேக நபர் முன்னர் இலங்கை இராணுவத்தில் பணியாற்றி 2015 ஆம் ஆண்டு இராணுவத்திலிருந்து தப்பி ஓடியவர் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சந்தேக நபர்  தமன பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 

இது தொடர்பில் தமான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் போராட்ட இயக்கத்தின் ஏற்பாட்டில் நீர்கொழும்பில்...

2026-08-12 17:32:12
news-image

இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினைக்கு...

2026-08-12 17:28:31
news-image

2025இல் முல்லைத்தீவில் 8,220.49 மெற்றிக்தொன் மீன்கள்...

2026-08-12 17:12:16
news-image

ஜப்பான் தூதரகப் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத்...

2026-08-12 16:57:08
news-image

வெளிப்படைத்தன்மை கொண்ட நீண்டகால முதலீடுகளுக்கு இலங்கையின்...

2026-08-12 16:42:09
news-image

இலங்கையில் இன்னும் ஆயுர்வேத சுற்றுலா அபிவிருத்தி...

2026-08-12 16:40:30
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 3 வாகனங்கள்...

2026-08-12 16:38:31
news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் திங்கட்கிழமை கொடியேற்றம்...

2026-08-12 16:14:25
news-image

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிக்கும் தீர்மானத்தை...

2026-08-12 15:52:14
news-image

பரீட்சைகள் திணைக்களத்துக்கும் ஹேக்கர் அச்சுறுத்தல்

2026-08-12 15:14:48
news-image

எல் நினோ தீவிரமடைய 81 சதவீதம்...

2026-08-12 14:57:07
news-image

கடற்படைத் தளபதியை சந்தித்தார் பாகிஸ்தான் தூதரக...

2026-08-12 14:56:29