பாம் - திரைப்பட விமர்சனம்
தயாரிப்பு : கெம்ப்ரியோ பிக்சர்ஸ்
நடிகர்கள் : அர்ஜூன் தாஸ், ஷிவாத்மிகா ராஜசேகர், காளி வெங்கட், நாசர், அபிராமி, பால சரவணன், சிங்கம் புலி மற்றும் பலர்.
இயக்கம் : விஷால் வெங்கட்
மதிப்பீடு : 2/5
வாய்வு கோளாறு காரணமாகவும், அஜீரணம் காரணமாகவும் எம்முடைய உடலில் இருந்து ஒலியுடன் கூடிய வாயு பிரிதலை பின்னணியாக கொண்டு நகைச்சுவையாக சொல்லப்பட்டிருக்கும் படைப்பு 'பாம் 'என்பதால்... இப்படத்திற்கு எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில் பட மாளிகைக்கு சென்ற ரசிகர்களை படக் குழுவினர் சிரிக்கவும்... சிந்திக்கவும்... வைத்தார்களா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.
காளகம்மாய்ப்பட்டி என்ற கற்பனையான கிராமத்தில் ஆண்டாண்டு காலமாக இரண்டு பிரிவினர் தங்களுக்குள் சின்ன கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும்.. மோதிக் கொள்வர். கிராமப்புறம் என்பதால் ஆதிக்க சாதியினர் - ஒடுக்கப்பட்ட சாதியினர் என இரண்டு பிரிவினரும்.. தங்களுக்கென்று சில கட்டுப்பாடுகளை விதித்து கொண்டு அதனை உறுதியாக கடைப்பிடித்து வருகிறார்கள். இந்த மக்கள் ஜாதி பிரச்சினை, கடவுள் நம்பிக்கை என முக்கியமான விடயங்களில் வித்தியாசமான அபிப்பிராயங்களை கொண்டிருக்கிறார்கள். இவர்களை ஒன்றிணைக்க அந்த மாவட்டத்திற்கு புதிதாக ஆட்சியராக வரும் கிருஷ்ணம்மாள் ( அபிராமி) முயற்சி மேற்கொள்கிறார்.
அதே தருணத்தில் இந்த கிராமத்தில் வாழும் கதிரவன் ( காளி வெங்கட்) என்பவர் இந்த இரண்டு கிராமங்களையும் இணைத்து விட வேண்டும் என்றும், இதற்கு கடந்த கால மோதல்களில் வீழ்த்தப்பட்ட பாலத்தை மீண்டும் புணரமைத்தால் நாளடைவில் மக்களிடையே வெறுப்புணர்வு குறைந்து அன்பும், ஒற்றுமையும் ஏற்படக்கூடும் என கருதுகிறார்.
இதற்காக அரசாங்கத்திற்கு மனு எழுதுகிறார். இந்நிலையில் கதிரவன் எதிர்பாராத விதமாக இறந்து விடுகிறார். ஆனால் அவரின் உடலில் இருந்து ஒலியுடன் வாய்வு பிரிவதால்... அவர் உயிருடன் இருக்கிறார் என்று ஒரு தரப்பினரும், அவருக்குள் சாமி வந்துவிட்டது என்று மற்றொரு தரப்பினரும் சொல்ல... அந்த சடலத்தை வைத்துக்கொண்டு ஊர் மக்களும், அரசாங்கமும் என்ன செய்தது? பிரிந்து கிடக்கும் மக்களிடையே ஒற்றுமை ஏற்பட்டதா? இல்லையா? என்பதை விவரிக்கும் படம் தான் 'பாம்.'
சமூகநீதி -சமத்துவம்- ஏற்றத்தாழ்வுகள் - ஆகியவை குறித்து வித்தியாசமான களம் அமைத்து, அதனூடாக வினா எழுப்பி இருக்கிறார் இயக்குநர் விஷால் வெங்கட். கடவுள் நம்பிக்கையால் மனிதர்கள் வன்முறையை கையில் எடுப்பதை தவிர்த்து விட்டு, அன்பு - மனிதநேயம்- பேச்சுவார்த்தை - மூலம் ஒன்றிணைய வேண்டும் என்பதையும் இயக்குநர் வலியுறுத்தி இருப்பதால் ..அவருடைய சமகால சமூகத்திற்கு தேவையான பேரன்பை முன்மொழிவதால் பாராட்ட தோன்றுகிறது.
மணி முத்து வேடத்தில் நடித்திருக்கும் காந்தக் குரலோன் (அர்ஜுன் தாஸ்) தன்னுடைய மிகையான நடிப்பை குறைத்துக் கொண்டு, கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து நடித்திருப்பது பிரமிப்பை தருகிறது.
கதிரவன் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் காளி வெங்கட் சடலமாக நாற்காலியில் அமர்ந்து நடித்து ரசிகர்களை சிரிக்க வைப்பதுடன் சிந்திக்கவும் வைத்திருக்கிறார். இவருடைய அனுபவ நடிப்பையும் பாராட்டலாம்.
பிரபா எனும் வேடத்தில் நடித்திருக்கும் நடிகை ஷிவாத்மிகா ராஜசேகருக்கு நடிப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்றாலும்.. வித்தியாசமான வேடத்தில் தோன்றி ரசிகர்களை ஈர்க்கிறார்.
கிருஷ்ணம்மாள் வேடத்தில் நடித்திருக்கும் நடிகை அபிராமியும் , செங்கண்ணன் என்ற பதவியில் உள்ள அரசியல்வாதியாக நடித்திருக்கும் நாசரும் அனுபவ நடிப்பால்.. ரசிகர்களின் கவனத்தைக் கவர்கிறார்கள்.
ஊர் தலைவராக சிங்கம்புலி தோன்றுவதும், வலையொளி நடத்தும் பாண்டியாக தோன்றும் பால சரவணன் சில காட்சிகளில் கிச்சு கிச்சு முட்டுவதும் ரசனை.
சில இடங்களில் ஒலிக்கலவை பொறியாளரின் கவனக்குறைவு காரணமாக அர்ஜுன் தாஸ் - காளி வெங்கட் - ஷிவாத்மிகா ராஜசேகர் ஆகியோரின் உரையாடல்கள் ... ரசிகர்களின் காதுகளுக்கு தஞ்சமடையவில்லை.
டி இமான் இசையில் வெளியான 'ஒப்புக்றீயா..'என்ற பாடலும், 'உனக்குள் ஒரு கடவுள் உண்டு' எனும் பாடலும் ரசிகர்களின் மனதில் ரீங்காரமிடுகிறது.
கடவுளின் பெயரால் மனிதர்களிடத்தில் இன்றும் மீதமிருக்கும் மூட நம்பிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பி இருக்கும் இந்தத் திரைப்படம்... நல்லதொரு முயற்சி என்ற அளவில் பாராட்டலாம்.
பாம்- சமபந்தி போஜனம்
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM