தயாரிப்பு : வீனஸ் இன்ஃபோடெய்ன்மென்ட்
நடிகர்கள் : குமரன் தங்கராஜன், பாயல் ராதாகிருஷ்ணா, ஜி. எம். குமார், குமரவேல், பால சரவணன், வினோத் சாகர், லிவிங்ஸ்டன், சிவா அரவிந்த் மற்றும் பலர்.
இயக்கம் : பாலாஜி வேணுகோபால்
மதிப்பீடு: 2.5/5
தொலைக்காட்சி தொடர் மூலம் அறிமுகமாகி, சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமான 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' குமரன் - கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் என்பதாலும், கொமடி திரைப்படம் என்பதாலும்... ரசிகர்கள் ஆவலுடன் படமாளிகைக்கு வருகை தந்தனர். அவர்களுக்கு படக் குழுவினர் குறைந்த பட்ச புன்னகையை பரிசாக வழங்கினார்களா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.
குமரன்( குமரன் தங்கராஜன்) திரைப்பட இயக்குநராக வேண்டும் என்பதற்காக அந்தத் துறையில் கடுமையாக உழைத்து வருகிறார். அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்நிலையில் படத்தை தயாரிப்பதற்கு அப்பப்பா - தாத்தா - சுப்பையா பிள்ளை( ஜி. எம். குமார்)யை அணுகி உதவி கேட்கிறார். முதலில் மறுப்பு தெரிவிக்கும் சுப்பையா பிள்ளை, பிறகு சம்மதம் தெரிவித்து உயில் எழுதி வைத்து விட்டு மரணமடைகிறார். அந்த உயிலில் அந்த வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் சமூக போராளியான வரதராஜன் ( குமரவேல்) என்பவருக்கும் சொத்தில் பங்களிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார். இதனால் குமரன், சமூக போராளியான வரதராஜன் மீது கடும் கோபம் கொள்கிறார். இந்த தருணத்தில் வரதராஜன் மர்மமான முறையில் மரணமடைகிறார். இது தொடர்பாக காவல்துறை வழக்கு பதிவு செய்து குமரனிடம் விசாரணையை தொடங்குகிறது. விசாரணையில் வரதராஜனின் மரணத்தின் பின்னணி என்ன? என்பதை விவரிப்பதும், குமரன் திரைப்பட இயக்குநரானாரா ?இல்லையா? என்பதை பார்வையாளர்களுக்கு விவரிப்பதும் தான் இப்படத்தின் கதை.
இப்படத்திற்கு முதலில் படத் தொகுப்பாளரை தான் பாராட்ட வேண்டும். அவர்தான் ரசிகர்களை உச்சகட்ட காட்சி வரை புன்னகை மாறாமல் பயணிக்க செய்வதில் பெரும் பங்களிப்பை செய்திருக்கிறார். இவரைத் தொடர்ந்து ஒளிப்பதிவாளரையும், பின்னணி இசையமைப்பாளரையும், உரையாடல் எழுதிய வசனகர்த்தாவையும் பாராட்டலாம்.
சின்னத்திரை நட்சத்திரமான குமரன் தன்னுடைய இளமையை தொலைத்த இறுக்கமான மற்றும் முத்தலான முகத்துடன் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். பல இடங்களில் திரைப்பட இயக்குநர் என்ற கதாபாத்திரத்தை தாங்கி நடிப்பதில் தடுமாறுகிறார்.
கதையை வழிநடத்திச் செல்லும் வரதராஜன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் குமரவேல்- தன் அனுபவம் மிக்க நடிப்பினாலும், ஓன் லைன் தத்துவத்தாலும் ரசிகர்களை எளிதாக ஈர்க்கிறார்.
சுப்பையா பிள்ளை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மூத்த நடிகர் ஜி எம் குமார்- வழக்கமான நாயகியாக நடித்திருக்கும் பாயல் ராதாகிருஷ்ணா- காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் நடிகர் சிவா அரவிந்த் - நடிப்பதற்கான வாய்ப்பினை தேடிக்கொண்டிருக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் வினோத் சாகர் - ஆகியோர் கவனிக்க வைத்திருப்பதுடன் புன்னகையும் பூக்க செய்கிறார்கள்.
வரதராஜனை யார் கொலை செய்திருப்பார்கள்? என்று குமரனும் , அவனது நண்பர்களும் இணைந்து திட்டமிட்டு, மூன்று தொழிலதிபர்களை குறி வைத்து நடத்தும் விசாரணை 'கலகல' டைப். இந்த காட்சிகளில் பால சரவணனின் கவுண்ட்டர் டொயலொக்குகள் படமாளிகையில் கரவொலியை எழுப்புகிறது.
திரைக்கதையில் இயக்குநர் செய்திருக்கும் புதுமை ... படத்தொகுப்பாளரால் நேர்த்தியாக ரசிகர்களுக்கு கடத்தப்பட்டிருக்கிறது.
குமார சம்பவம் - கொமடி சம்பவம்

















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM