இயக்குநர்களும் நட்சத்திர நடிகர்களுமான சமுத்திரக்கனி - கௌதம் வாசுதேவ் மேனன் ஆகிய இருவரும் கதையின் நாயகர்களாக ஒன்றிணைந்து நடித்திருக்கும் ' கார்மேனி செல்வம்' எனும் திரைப்படத்தின் கிளர்வோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் ராம் சக்ரீ இயக்கத்தில் உருவாகியுள்ள ' கார்மேனி செல்வம்' திரைப்படத்தில் சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன், லட்சுமி பிரியா, அபிநயா, கார்த்திக் குமார், படவா கோபி, மதுமிதா , அர்ஜுனன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். யுவராஜ் தக்சன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மியூசிக் கிளவுட் ஸ்டுடியோ மற்றும் டெக்னாலஜி எனும் நிறுவனம் இசையமைத்திருக்கிறது. வாழ்வியல் தத்துவங்களை பற்றிய விவாதத்தை முன்னிறுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பாத்வே புரொடக்ஷ்ன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண் ரங்கராஜுலு தயாரித்திருக்கிறார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் ஓக்டோபர் மாதம் 17ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் கிளர்வோட்டம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் எளிய மனிதர்கள் குறிப்பாக நாளாந்தம் பணத்திற்காக ஏக்கத்துடன் பணியாற்றும் எளிய மனிதர்களின் வாழ்வியல் குறித்த காட்சிகள் சரளமாக இடம்பெறுவதால் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM