நடன கலைஞர், நடன இயக்குநர், நடிகர், நட்சத்திர நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முக ஆளுமை மிக்க கலைஞரான பிரபுதேவா மாறிவரும் மக்களின் பொழுது போக்கு வடிவங்களுக்கு ஏற்ப தன்னையும் மாற்றிக் கொண்டுள்ளார். அதிகரித்து வரும் டிஜிட்டல் தள ரசிகர்களுக்காக முதன்முறையாக சோனி லிவ் டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் 'சேது ராஜன் ஐபிஎஸ்' எனும் இணைய தொடர் மூலம் டிஜிட்டல் தளத்திலும் தன் முத்திரையை பதிக்க தொடங்கி இருக்கிறார்.
இயக்குநர் ரஃபீக் இஸ்மாயில் இயக்கத்தில் உருவாகும் ' சேதுராஜன் ஐபிஎஸ் ' எனும் இணைய தொடரில் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த இணைய தொடர் சோனி லிவ் எனும் டிஜிட்டல் தளத்தில் அசல் இணைய தொடர் வரிசையில் வெளியாகிறது.
கிரைம் திரில்லர் ஜேனரில், அரசியல்- அதிகாரம்- நீதி -ஆகியவற்றின் பின்னணியில் இந்த இணைய தொடர் பரபரப்பும், விறுவிறுப்பும் குறையாமல் உருவாக்கப்பட்டிருக்கிறது. விரைவில் இதன் முன்னோட்டமும், வெளியீட்டு திகதியும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM