இந்தியாவிலிருந்து எடுத்துவரப்பட்ட முருகன், வள்ளி, தெய்வானை விக்கிரகங்கள் கதிர்காமத்தில் வழிபாட்டுக்காக கடந்த சனிக்கிழமை (6) பிரதிஷ்டை செய்யப்பட்டன.
2023ஆம் ஆண்டு பழனியைச் சேர்ந்த புலிபாணி சுவாமிஜி, கதிர்காமத்தில் முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணம் நிகழ்த்த இலங்கையர்கள் குழுவுக்கு ஆலோசனை வழங்கியிருந்தார்.
இந்த முருகன், வள்ளி, தெய்வானை விக்கிரகங்கள் தஞ்சாவூரில் வடிவமைக்கப்பட்டு, தமிழ்நாடு, காஞ்சி மற்றும் அறுபடைவீடுகளில் பூஜை செய்யப்பட்டது.

அந்த விக்கிரகங்கள் கடந்த ஜனவரி மாதம் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்டபோது, விமான நிலையத்தில் பூஜை செய்யப்பட்டு, பின்னர், யாழ்ப்பாணத்தில் உள்ள மாவை கந்தன் ஆலயத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டன.
கடந்த ஆகஸ்ட் 29ஆம் திகதி மாவிட்டபுரத்திலிருந்து புறப்பட்ட முருகப்பெருமான், வள்ளி விக்கிரகங்கள் பெரு நிலப்பரப்பூடாக திருக்கேதீஸ்வரம் சென்றடைந்ததைத் தொடர்ந்து, அங்கு பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.
அதையடுத்து, மட்டக்களப்புக்கு கொண்டுசெல்லப்பட்டு, அங்கு பிரசித்தி பெற்ற முருகன் ஆலயங்களில் பூஜை வழிபாடுகள் நடத்தப்பட்டு தலைநகருக்கு விக்கிரகங்கள் எடுத்துச் செல்லப்பட்டன.
அகில இலங்கை இந்து காங்கிரஸ், பம்பலப்பிட்டி யோகா மையம், சின்மயா மிஷன், பாணந்துறை, களுத்துறை மற்றும் காலியில் உள்ள முருகன் கோயில்களில் பூஜைகள் நிகழ்த்தப்பட்டு, பின்னர், கதிர்காமத்தை சென்றடைந்தன.
முருகப்பெருமான் தம்பதி சமேத விக்கிரகத்தை வரவேற்கும் நிகழ்வில் மகாநாயக்கர்கள் இணைந்து கலந்துகொண்டு வரவேற்று பிரதிஷ்டை செய்தமை இன ஒற்றுமையின் அடையாளமாக பார்க்கப்படுகிறது.
முன்பு கதிர்காமத்தில் முருகனின் வேலுக்கு பூஜை வழிபாடுகள் நடத்தப்பட்ட நிலையில், தற்போது ஆலயத்துக்கு வருகைதரும் பக்தர்கள் முருகப்பெருமான், வள்ளி, தெய்வானையை வழிபட வாய்ப்பு கிடைத்துள்ளது.
அத்துடன் ஆலயத்தில் ஒவ்வொரு நாளும் பூஜை வழிபாடுகள் இடம்பெறுவதுடன் விசேட நாட்களில் மகாயாகங்கள் நடைபெறும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.





















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM