கிளிநொச்சியில் உணவுக் கடைகள் தற்காலிக மூடல்

12 Sep, 2025 | 01:01 PM
image

நாச்சிக்குடா பகுதியில் சுகாதார சீர் கேட்டுடன் இயங்கிவந்த இரண்டு உணவு கடைகள் கிளிநொச்சி நிதிமன்றத்தின் கட்டளையோடு  தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

கிளிநொச்சி முழங்காவில் பொதுசுகாதார பரிசோதகர் பிரிவிற்குட்பட்ட நாச்சிக்குடா பகுதியில் சீர் கேட்டுடன் இயங்கிவந்த இரு உணவகங்களுக்கும் 65,000 ரூபா தண்டப் பணம் விதிக்கப்பட்டதுடன் இரண்டு உணவகம் நேற்று வியாழக்கிழமை  (11) தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

மேற்பார்வைப் பொது சுகாதார பரிசோதகர் றெணால்ட், பொது சுகாதார பரிசோதகர்களான மு.ஜெனோயன், தளிர்ராஜ் இ. தர்மிகன்  ஆகியோர் இணைந்த குழு செயற்பாட்டில் இரு உணவகங்களும் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிவந்தமை இனங்காணப்பட்டிருந்தது.

அதனையடுத்து  குறித்த பிரச்சினைக்கு எதிராக முழங்காவில் பொது சுகாதார பரிசோதகர் இ. தர்மிகனால் கிளிநொச்சி நீதிமன்றில் வழக்கு தாக்கல்  செய்யப்பட்டிருந்தது.

அதற்கமைவாக  கிளிநொச்சி நீதிமன்ற நீதவானால் இரு உணவகங்களுக்கும் 65,000 ரூபா தண்டப் பணம் விதிக்கப்பட்டதுடன்

சீர்கேடுகளை நிவர்த்தி செய்யும் வரை இரண்டு உணவகமும் தற்காலிகமாக மூடுமாறும்  கட்டளையிடப்பட்டிருப்பது குறிப்பிடதக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறைச்சாலை நெரிசலைக் குறைக்க அபின் மற்றும்...

2026-07-14 16:58:44
news-image

அரசியலமைப்புடன் விளையாடுவது ஜனநாயகத்தை சீர்குலைக்கும் செயல்;...

2026-07-14 15:42:45
news-image

நீதித்துறையை ஆக்கிரமித்து எதிர்க்கட்சிகளை முடக்க அரசு...

2026-07-14 17:44:19
news-image

அரசை விமர்சித்து சரியான பாதைக்கு திருப்புவோம்;...

2026-07-14 14:22:50
news-image

204 மில்லியன் பெறுமதியான அதிநவீன ஆய்வக...

2026-07-14 14:27:28
news-image

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவத்துக்கு பரிந்துரைகள் அமுல்படுத்தாததே...

2026-07-14 14:35:40
news-image

இலங்கை மற்றும் தான்சானியாவின் நீரியல் வளர்ப்புத்...

2026-07-14 22:02:43
news-image

முன்னாள் கட்டார் நாட்டின் தலைவரின் இறுதிச்சடங்கில்...

2026-07-14 21:57:06
news-image

விவசாயிகளுக்கு சலுகைக் கடன் வழங்க புதிய...

2026-07-14 18:25:14
news-image

ஜே.வி.பி அரசாங்கத்தின் போலித்தனம் அம்பலம் ;...

2026-07-14 18:26:52
news-image

உளவுத்துறை மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையிலேயே பிரமுகர்...

2026-07-14 18:25:38
news-image

புதிய தமிழ் - முஸ்லிம் கட்சிகளின்...

2026-07-14 18:24:09