வவுனியாவில் இன்று  காலை 10 மணியளவில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சி. சிவமோகனினால் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு  அவரது அலுவலகத்தில் மூக்குக்கண்ணாடி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. 

20 மில்லியன் ரூபா செலவில் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இதையடுத்து இன்று வவுனியாவில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு முதல் கட்டமாக இன்று வழங்கிவைக்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினரால் 200பேருக்கு மூக்குக்கண்ணாடி வழங்கும் நிகழ்வில் இன்று விசேடமாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.