இலங்கையின் மார்ல்போ டிரேடிங் கம்பனியின் உரிமையாளரான எம். மணிமுத்து, ஆகஸ்ட் 23, 2025 புதுச்சேரி, இந்தியாவில் உலகளாவிய வணிகம் மற்றும் தொழில்துறைக்கு செய்த சிறப்பான பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக, 2025 இற்கான (GOPIO) சர்வதேச வணிகத் திறமை விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இவ் விருது, GOPIO இந்தியா (Global Organization of People of Indian Origin) மற்றும் புதுச்சேரி அரசின் இணை ஏற்பாட்டில், புதுச்சேரி துப்புவ்பேட் பழைய துறைமுக நிலப்பரப்பில் அமைந்த கண்காட்சி மற்றும் வர்த்தக மையத்தில் நடைபெற்ற சிறப்பான விழாவில் வழங்கப்பட்டது.
இந்த விழாவில், உலகளாவிய கொள்கை நிர்ணயர்கள், நிபுணர்கள், மற்றும் தொழில் முனைவோர் ஆகியோர் சிறந்த தொழில் முனைவின் மூலம் உலகளாவிய தொடர்பு மற்றும் எல்லைத் தாண்டிய ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் பொதுவான நோக்கத்துடன் கலந்து கொண்டனர்.
இந்த உயரிய விருது, இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களில், தூரநோக்கு கொண்ட தலைமைத்துவம், புதுமை மற்றும் நிலையான வணிகத் திறமையை உலகளவில் வெளிப்படுத்திய நபர்களுக்கு வழங்கப்படுகிறது.
மணிமுத்து, நிகழ்வில் கௌரவிக்கப்பட்ட உலகளாவிய வணிகத் தலைவர்கள் மற்றும் தொழில் முனைவோரில் சிறப்பாகத் திகழ்ந்து, மார்ல்போ டிரேடிங் கம்பனியின் இலங்கை சந்தையில் நிலைப்பாட்டை வலுப்படுத்துவதோடு, பிராந்திய மற்றும் சர்வதேச பொருளாதார வளர்ச்சிக்கும் முக்கிய பங்களிப்பு செய்தார் என் அங்கீகரிக்கப்பட்டார்.
GOPIO வின் பேச்சாளர் விருது பெற்றவர்களை பாராட்டியப்போது “இந்த வணிக தலைவர்கள் உறுதிபாடு, புதுமை மற்றம் உலகளாவிய சிந்தனை ஆகியவற்றிற்கு முன்மாதிரியாக உள்ளனர்.
இத்தகைய மதிப்புகள் நிலையான பொருளாதார முன்னேற்றத்திற்கும், எதிர்கால தலைமுறையை ஊக்குவிற்பதற்கும் அத்தியாவசிமானவை" என்று தெரிவித்தார்.
GOPIO சர்வதேச வணிக திறமை விருதானது, உலகெங்கிலும் உள்ள இந்திய வம்சாவளி தொழில்முறை வல்லுனர்களுக்கான மிகப் பெருமைக்குறிய விருதுகளில் ஒன்றாக இருந்து சாதனை, பொறுப்பு மற்றும் தொழில் முனைவு ஆவலை குறிக்கும் சின்னமாக விளங்குகிறது.
“மணிமுத்து அவர்கள் தனது நன்றியை வெளிப்படுத்திய போது கூறினார்:“இந்த விருது எனது தனிப்பட்ட சாதனையல்ல எங்கள் அர்ப்பணிப்புடன் செயல்படும் குழுவினரின் மற்றும் மதிப்புமிக்க பங்குதாரர்களின் கூட்டு முயற்சிக்கான சான்றாகும்.
எங்கள் வெற்றியின் ஆதாரம் ஒத்துழைப்பு, நேர்மை மற்றும் வாடிக்கையாளர்களின் நிலையான நம்பிக்கையாகும் இவை எங்கள் நிறுவனத்தின் வணிக தத்துவத்தின் மூலக்கற்களாகத் தொடர்கின்றன.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM