போட்டிகளும் பொறாமைகளும் நிறைந்த இந்த புவியில் வெற்றி பெற்று சாதாரணமானவர்களாக வாழ்வதற்கே நாளாந்தம் மிகப்பெரிய போராட்டத்திற்கு முகம் கொடுக்க வேண்டியதாக இருக்கிறது. இந்நிலையில் தற்போதைய சூழலில் சாதனையாளர்களாக வெற்றி பெற வேண்டும் என்றால் ... எம்முடைய ஆற்றலை விட ...அறிவாற்றலை விட.. உள வலிமையை விட... தெய்வீக ஆற்றல் அவசியமாகிறது. இதை புரிந்து கொள்கிறோம். ஆனால் இதனை எப்படி பெறுவது? என்பதில் குழப்பங்கள் நீடிக்கிறது. இது குறித்து எம்முடைய ஆன்மீகம் முன்னோர்கள் பல சூட்சமமான குறிப்புகளை முன்மொழிந்திருக்கிறார்கள். அவற்றில் சிலவற்றை காண்போம்.
முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமான் ..உங்களது வீட்டிலோ அல்லது அருகில் இருக்கும் அரச மரத்தடியிலோ அல்லது ஆலயத்திலோ இருந்தால்... அவரை வணங்கிட வேண்டும். அவரை வணங்குவதற்கு முன் தீபம் ஏற்ற வேண்டும். அந்த தீபத்தை ஏற்றுவதற்கு முன் திரியுடன் சிறிதளவு வெட்டி வேரையும் ஒன்றிணைத்து தீபம் ஏற்ற வேண்டும். ஒரே ஒரு ஒற்றை கோரிக்கையை மட்டுமே அந்த தருணத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இந்த ஒற்றை கோரிக்கையுடனான வெட்டிவேர் திரி கலந்த தீபத்தை தொடர்ந்து ஏழு நாட்கள் ஏற்றி வழிபட ... உங்களுக்குள் தெய்வீக ஆற்றல் சூட்சமமாக கிடைக்கப்பெற்று, நீங்கள் நினைத்த காரியத்தை எந்த தடங்கலும் இன்றி சாதித்து சாதனையாளராக மிளிர்வீர்கள்.
இத்தகைய பிரார்த்தனையை மேற்கொள்வதில் நடைமுறை ரீதியிலான அசௌகரியங்கள் அதிகம் என்று கருதுபவர்கள்... தங்களது பிரார்த்தனை பலிக்க தங்களுக்கு தெய்வீக ஆற்றல் வேண்டும் என விரும்பினால்... நீங்கள் குருவாக கருதும் ஒருவரிடம் சரணாகதி அடைந்து, தெய்வீக ஆற்றல் வேண்டும் என பிரார்த்திக்க வேண்டும். அந்தப் பிரார்த்தனை குரு மூலமாக குலதெய்வத்திற்கும், இந்த பிரபஞ்சத்திற்கும் கடத்தப்பட்டு உங்களுக்கு தெய்வீக ஆற்றல் விரைவாகவும், நிறைவாகவும் கிடைக்கும்.
உடனே எம்மில் சிலர் எங்களுக்கு குரு - குருவானவர் என்று யாரும் இல்லை. நாங்கள் என்ன செய்வது? என கேட்பர். இவர்கள் பிரம்ம முகூர்த்த தருணத்தில் எழுந்து பூஜை அறையில் அமர்ந்து 'தெய்வீக ஆற்றலை நான் தற்போது பெறுகிறேன். உணர்கிறேன்' என்ற மந்திரத்தை தமிழில் உச்சரிக்கலாம் அல்லது ஆங்கிலத்தில் Divine Magic Begins Now என்று உச்சரிக்கலாம். இத்தகைய பிரார்த்தனையை தொடர்ந்து 21 நாட்கள் வரை மேற்கொண்டால்... உங்களுக்குள் தெய்வீக ஆற்றல் இந்த பிரபஞ்சத்தின் மூலமாக சூட்சமமாக கிடைக்கும். அதன் பிறகு நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்த விதத்தில் தெய்வீக ஆற்றல் உதவியுடன் நிறைவேற்றி வாழ்க்கையில் வெற்றி பெறுவீர்கள்.
தொகுப்பு: சுபயோக தாசன்














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM