“மகாகவி” சுப்பிரமணிய பாரதியாரின் 104வது நினைவுதினம் இன்று (11) வட்டுக்கோட்டையில் அமைந்துள்ள அவரது நினைவுத் தூபியில் நடைபெற்றது.
இதன்போது பாரதியாரின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
கலாநிதி சிதம்பரமோகன் தலைமையில் நடைபெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வில் மறவன்புலவு சச்சிதானந்தம் உட்பட பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
1882ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் திகதி தூத்துக்குடி மாவட்டத்தில் சின்னசாமி ஐயருக்கும் இலக்குமி அம்மாளுக்கும் மகனாக பிறந்த பாரதியார் கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதியாக விளங்கினார்.
அவர் தினமும் உணவளிக்கும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் யானையால் தாக்கப்பட்ட பிறகு, உடல் நலம் குன்றிய நிலையில் சில மாதங்களுக்குப் பிறகு 1921 செப்டம்பர் 11 அன்று அதிகாலை இறையடி சேர்ந்தார்.
அவரின் படைப்புகள் இன்று வரை பேசப்படும் ஒன்றாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
























கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM