பிரதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விவாதத்தில் சபை ஒத்திவைப்பு!

11 Sep, 2025 | 05:22 PM
image

(எம்.ஆர்,எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

பிரதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை நிராகப்பதற்கு காரணமாக சபாநாயகர் எடுத்துக்காெண்ட சட்டமா அதிபரின் அறிக்கை மற்றும் பாராளுமன்ற செயாளரின் பணியாற்தொகுதியின் அறிக்கையை சபைக்கு சமர்ப்பிக்குமாறு தெரிவித்து  எதிர்க்கட்சினர் மேற்கொண்ட கடும் எதிர்ப்பு காரணமாக சபையை கட்டுப்படுத்த முடியாமல் சபாநாயகருக்கு சபை நடவடிக்கையை 10 நிமிடங்குளுக்கு ஒத்திவைக்க வேண்டி ஏற்பட்டது.

பாராளுமன்றம் வியாழக்கிழமை (11) சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கைகளைத் தொடர்ந்து, விசேட கூற்றொன்றை முன்வைத்து எதிர்க்கட்சி பிரதமகொரடா கயந்த கருணாரத்ன குறிப்பிடுகையில், எங்களால் முன்வைக்கப்பட்டிருந்த நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் நீங்கள் நேற்று (நேற்று முன்தினம்) அறிவிப்பொன்றை செய்திருந்தீர்கள். இதன்போது, சட்டமா அதிபரின் அறிக்கை மற்றும் பாராளுமன்ற செயாளரின் பணியாற்தொகுதியின் அறிக்கையையும் நாங்கள் தெரிந்துகொள்வதற்காக சபைக்கு சமர்ப்பிக்குமாறு தெரிவித்திருந்தோம்.

நம்பிக்கையில்லா பிரேரணையை நிராகரிப்பதற்கான காரணம் என தெரிவித்த விடயங்கள் தெளிவற்றதாகும். இந்த சபையில் சபாநாயகர்கள் சபையில் நபிக்கையில்லா பிரேரணைகளை அனுமதித்த முறைகள் தொடர்பில் பல முன்மாதிரிகள் இருக்கின்றன.

ஆனால் முதல் தடவையாகவே இந்த சபாநாயகரே நப்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை நிராகரித்தார். 159 உறுப்பினர்களை வைத்துக்கொண்டுள்ள அரசாங்கத்துக்கு ஏன் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு முகம்கொடுக்க முடியாது என கேட்கிறோம். அதனால் சட்டமா அதிபரின் அறிக்கை மற்றும் பாராளுமன்ற செயாளரின் பணியாற்தொகுதியின் அறிக்கையை சபைக்கு சமர்ப்பிக்குமாறு மீண்டும் கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

அதற்கு சபாநாயகர் பதிலளிக்கையில், சட்டமா அதிபரின் அறிக்கை மற்றும் பாராளுமன்ற செயாளரின் பணியாற்தொகுதியின் அறிக்கையை பரிசீலனை செய்துவிட்டே, நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில்  எனது நிலைப்பாட்டை அறிவித்தேன் என்றார்.

அதனைத் தொடர்ந்து எழுந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிடுகையில், அரசியலமைப்பின் 46 (1) உறுப்புரைக்கமைய பிரதி அமைச்சர் நிறைவேற்று அதிகாரத்தின் ஒரு பகுதியாகும். அதனாலே சில சந்தர்ப்பங்களில் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் சபையில் இருக்கும்போதே பிரதி அமைச்சர் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார். அத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்டுவதற்கான விவாத்துக்கான நம்பிக்கையில்லா பிரேரணையாகும். அதனால் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்காகவாவது இந்த விவாதத்தை எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

இதன்போது எழுந்த எதிர்க்கட்சி உறுப்பினர் அஜித் பி பெரேரா குறிப்பிடுகையில், சபாநாயகர் நம்பிக்கையிலா பிரேரணை தொடர்பில் சபைக்கு தெரிவித்த உத்தரவு, சிறு பிள்ளைகளின் கட்டுரை போன்றது. அதில் எந்த  தரக்கமும் இல்லை. அதனால் இதுதொடர்பில் சட்டமா அதிபர் மற்றும் பாராளுமன்ற செயாளரின் பணியாற்தொகுதியினர் தெரிவித்த விடயம் தொடர்பில் அறிந்துகொள்ளும் உரிமை எங்களுக்கு இருக்கிறது. அந்த உரிமையை நீங்கள் இல்லாமலாக்கக்கூடாது, நீங்கள் இவ்வாறு ஒருதலைப்பட்சமாக  வெளிப்படை தன்மையுடன் செயற்படுமாக இருந்தால், உங்கள் மீதான நம்பிக்கை இல்லாமல் போகிறது. உங்களுடன் இணைந்து செயற்பட முடியாமல் போகிறது என்றார்.

அதனைத் தொடர்ந்து எழுந்த  முஜிபுர் ரஹ்மான் எம்.பி. பிரதி அமைச்சர் ஒருவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரும் முறை ஒன்று நிலையியற்கட்டளையில் இல்லை என்று தெரிவித்தே நிராகரித்திருந்தீர்கள். நம்பிக்கையில்லா பிரேரணை யாரு்கு கொண்டுவர முடியும் யாருக்கு கொண்டுவர முடியாது என நிலையியற் கட்டளையில் இல்லை.

அதேபோன்று பாதுகாப்பு அமைச்சர் இல்லாத சந்தர்ப்பங்களில் பதில் பாதுகாப்பு அமைச்சராக செயற்படும் ஒருவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவர முடியாது என தெரிவிப்பதில் எந்த நியாயமும் இல்லை. நம்பிக்கையில்லா பிரேரணை வெற்றிபெற்றாலும் பிரதி அமைச்சரின் பதவி இல்லாமலாகப்போவில்ல. அது ஜனாதிபதியினால் நியமிக்கப்படுவதாகும். ஆனால் இந்த விவாதம் இடம்பெற்றால், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் பல விடயங்கள் வெளிவரும் என்ற அச்சத்தினாலே இதனை நிராகரித்தீர்கள் என்றார்.

அதனைத் தொடர்ந்து தயாசிறி ஜயசேகர எம்பி, குறிப்பிடுகையில், இலங்கையில் எதிர்க்கட்சித் தலைவர் ஒருவருக்கு எதிராகவும் நம்பிக்கையிலா பிரேரணை கொண்டுவந்திருக்கிறது. அதனால் பிரதி அமைச்சருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை நிராகரித்ததன் சபாநாயகர் பாராளுமன்றத்துக்கு மோசமான  முன்மாதிரி ஒன்றை வழங்கி இருக்கிறார் என்றார்.

நளின் பண்டார எம்.பி குறிப்பிடுகையில், வெஸ்மினிஸ்டர் சம்பிரதாயமே இந்த பாராளுமன்றத்தில் பின்பற்றப்படுகிறது. அதன் பிரகாரம் பிரதி அமைச்சர் ஒருவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவந்தமமைக்கு இங்கிலாந்து பாராளுமன்றத்தில் போதுமான அளவு உதாரணங்கள் இருக்கின்றன. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் பிரதி அமைச்சருக்கு எதிராக பாரிய குற்றச்சாட்டு இருக்கிறது. அதனாலே நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவந்தோம் என்றார்.

அதனைத் தொடர்ந்து சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்னாயக்க குறிப்பிடுகையில், பிரதி அமைச்சர் ஒருவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவர முடியாது என நான் ஆரம்பத்திலேயே தெரிவித்திருந்தேன்.

அதற்கு எடுத்துக்காட்டாக, 2007 ஒக்டோபர் 2ஆவது செவ்வாய்க்கிழமை ஒழுங்கு புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, மேர்வின் சில்வா இராஜாங்க அமைச்சராக இருந்தபோது, அவரின் ஒரு சில செயற்பாடுகள் பாராளுமன்றத்தின் கெளரவத்துக்கு பாதிப்பு என தெரிவி்தது, அவரின் செயற்பாடுகளை கண்டித்து பிரேரணை ஒன்று கொண்டுவந்திருந்தது. அப்போது சபாநாயகராக இருந்த ஜோசப் மைக்கல் பெரேரா, அந்த பிரேரணையை பாராமன்றத்தில் விவாதிப்பதற்கு சபாநாயகர் ஜோசப் மைக்கல் பெரேரா அனுமதிக்கவில்லை என தெரிவித்தபோது, எதிர்க்கட்சியினர் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் கூற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். 

என்றாலும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தொடர்ந்து உரையாற்று முற்பட்டபோது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் சபை மத்திக்கு வந்து, சட்டமா அதிபரின் அறிக்கை மற்றும் பாராளுமன்ற செயாளரின் பணியாற்தொகுதியின் அறிக்கையை சபைக்கு மர்ப்பிக்குமாறு தெரிவித்து, கோஷம் எழுப்பிக்கொண்டிருந்தனர். இதனால். சபையை கட்டுப்படுத்த முடியாமல் சபாநாயகர், சபை நடவடிக்கையை 10 நிமிடங்ளுக்கு ஒத்திவைப்பதாக தெரிவித்து சபை நடவடிக்கைகளை காலை 9.50 மணிக்கு ஒத்திவைத்தார்.

பின்னர் பாராளுமன்றம் மீண்டும் 10.5 மணிக்கு கூடியது. இதன்போது மீண்டும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க எழுந்து, பிரதி அமைச்சர் அருன ஜயசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை முறையாக கொண்டுவந்தால், அது தொடர்பில் விவாதிப்பதற்கு நாங்கள் தயார்.இராஜாங்க அமைச்சராக இருந்து மேர்வின் சில்வா, மஹிந்த ரத்னதிலக்க ஆகியோருக்கு எதிராக 2007இல் கண்டனப்பிரேரணை கொண்டுவந்திருக்கிறதே தவிர நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரவில்லை.

நம்பிக்கையில்லா பிரேரணை, பாராளுமன்றத்தில் பதவி வகிக்கின்ற ஒருவருக்கு எதிராக மாத்திரமே கொண்டுவர முடியும். பிரதி அமைச்சர் பாராளுமன்றத்தின் பதவி வகிப்பதில்லை. இவ்வாறு கருத்து தெரிவிக்கும்போது எதிர்க்கட்சியினர் அவரின் கருத்துக்களுக்கு எதிராக சத்தமிட்டு வந்தனர்.

இதன்போது சபாநாயகர், இந்த விடயங்களை கட்சி தலைவர்கள் கூடி தீர்த்துக்கொள்வோம் என தெரிவித்து சபை நடவடிக்கையை முன்னெடுக்க முன்பட்டபோது, சபை முதல்வர் அதனை கருத்திற்கொள்ளாமல் தொடர்ந்து அவரது கருத்தை தெரிவித்து வந்தார்.

அதனைத் தொடர்ந்து எழுந்த தயாசிறி எம்.பி. பிரதி அமைச்சருக்கும் அதிகாரம் இதுவும் வழங்கப்படவில்லை என்றால். அவர் பாதுகாப்பு பிரதி அமைச்சராக உத்திரவிடும் எந்த கட்டளையையும் இராணுவத்தினர் பின்பற்ற தேவையில்லை என என இராணுவத்தினருக்கு தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்தபோது அளும் தரப்பு எம்.பிக்க அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். 

இதன்போது மீண்டும் எழுந்த அமைச்சர் பிமல், இவர்களின் நம்பிக்கையில்லா பிரேரணையை மேல்மாகாணத்தில் இருக்கும் உறுப்பினர்களைக்கொண்டு தோற்கடிக்க முடியும். அதனால் இவர்களின் கூச்சலுக்கு செவி சாய்க்காமல் சபையை முன்னெடுத்துச்செல்ல வேண்டும் என தெரிவித்து, எதிர்க்கட்சி உறுப்பினர்களை பார்த்து சபைக்கு பொருத்தமில்லாத வார்த்தையை பயன்படுத்தினார். அதன்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள்  அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் பொருத்தமில்லாத வார்தையை வாபஸ்பெற்றுக்கொள்ளுமாறு தெரிவிக்குமாறு சபாநாயரை கேட்டுக்கொண்டு மீண்டும் சபை நடுவுக்கு வந்தனர்.

சபாநாயகர் எதிர்க்கட்சி உறுப்பினர்களை பார்த்து அனைவரையும் ஆசனங்களுக்கு செல்லுமாறு பல தடவைகள் தெரிவித்தபோதும், எதிர்க்கட்சியினர் தகாத வார்த்தையை வாபஸ் பெறுமாறு தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதன்போது சபாநாயகர், அமைச்சர் பிமல் ரத்நாயக்கவை பார்த்து,  குறித்த  தகாத வார்த்தையை வாபஸ் பெற்றுக்கொள்ளுங்கள் என்றார். என்றாலும் அமைச்சர் பிமல், அது தொடர்பில் கண்டுகொள்ளாது, சபாநாயகரை பார்த்து, இந்த மோசமான முறைக்கு இடமளிக்காமல் சபை நடவடிக்கயை கொண்டு செல்லுங்கள் என தெரிவித்து வந்தார். 

அதன் பிரகாரம் சபாநாயகர் சபை நடவடிக்கையை கொண்டுசெல்ல நடவடிக்கை எடுத்தபோது, எழுந்த எதிர்க்கட்சி பிரதமகொரடா கயந்த கருணாதிலக்க, சபை முதல்வரின் அந்த தகாத வாரத்தையை ஹன்சாட்டில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

அதற்கு சபாநாயகர் தகாத வார்த்தைகளை நீக்க நடவடிக்கை எடுப்பேன் என்றார். அதனைத் தொடர்ந்து சபை நடவடிக்கையை கொண்டு செல்லும் வகையில், வாய்மூல விடைக்கான கேள்வி கேட்பதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பெயர்களை சபாநாயகர் அழைத்தபோது, அந்த கேள்விகளை கேட்பதாக பதிலளித்தபோது, ஆளும் தரப்பு அமைச்சர்கள் அந்த கேள்விகளுக்கு பதிலளிக்காமல் பதில் வழங்க காலம் எடுத்துக்கொள்வதாக தெரிவித்து, எதிர்க்கட்சி உறுப்பினர் யாருடைய கேள்விக்கும் பதிலளிக்காமல் காலம் எடுத்துக்கொண்டனர். ஆளும் தரப்பு உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு மாத்திரம் பதிலளிக்கப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து சபை நடவடிக்கை கூச்சம் குழப்பத்துக்கு மத்தியில் முன்னெடுக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பியூமி ஹன்சமாலிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்...

2025-12-17 13:53:48
news-image

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் காணாமல்போன “மஞ்சள் அனகொண்டா”...

2025-12-17 12:02:04
news-image

தெமட்டகொடை பொலிஸ் நிலைய கான்ஸ்டபிள் கைது!

2025-12-17 11:47:18
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-12-17 12:53:31
news-image

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட 50 சதவீத மக்களுக்கு...

2025-12-17 11:39:03
news-image

தீக்காயங்களுக்குள்ளான காட்டு யானை சிகிச்சை பலனின்றி...

2025-12-17 12:32:37
news-image

பிரதமர் தலைமையில் DSCSC பாடநெறிக்கான 19ஆவது...

2025-12-17 12:11:55
news-image

பயிர்ச் சேதங்களுக்கான இழப்பீடு : விவசாயிகளுக்கு...

2025-12-17 11:16:08
news-image

‘சமூக சக்தி’ திட்டத்தை செயல்படுத்துவது குறித்து...

2025-12-17 11:58:09
news-image

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் ஆர்ப்பாட்டம்!

2025-12-17 11:29:20
news-image

நாட்டை கட்டியெழுப்பும் தேசிய நிதியத்திற்கு Rekhas...

2025-12-17 11:57:52
news-image

எதிர்க்கட்சித் தலைவருக்கும் ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளருக்குமிடையில்...

2025-12-17 11:34:27