வவுனியா நகரசபை வீதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் இன்று  காலை 10.30 மணியளவில்  தமிழ் மக்களை பொறுப்பேற்பது யார்? என்ற தலைப்பில் அரசியல் கலந்தாய்வு ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

வவுனியா சமூக ஆர்வலர்களின் ஏற்பாட்டில் நடைபெறும் இவ் கலந்தாய்வு கூட்டத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சபை உறுப்பினர்களான ஜீ.ரி.லிங்கநாதன், ம.தியாகராஜா, அரசியல் ஆய்வாளர் நிலாந்தன், ஆய்வாளர் சி.அ.சோதிலிங்கம் மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன்,   பல்கலைக்கழக மாணவர்கள், அரசியல் ஆய்வாளர்கள்,  சமுக அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.