பாலியில் வெள்ளப்பெருக்கு ; 14 பேர் உயிரிழப்பு

Published By: Digital Desk 3

11 Sep, 2025 | 03:48 PM
image

இந்தோனேசிய தீவான பாலியில் இந்த வாரம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. 

சுற்றுலா மையத்தின் தலைநகரான டென்பசாரில் இரண்டு பேர் காணாமல் போயுள்ளனர். அவர்களைத் தேடும் பணியில் 125 மீட்புப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அனர்த்த தணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

500க்கும் மேற்பட்டோர் பாடசாலைகள் மற்றும் பள்ளிவாசல்களில் இருந்து  வெளியேற்றப்பட்டுள்ளார்.

செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமைகளில் பெய்த கடும் மழையால் டென்பசார் மற்றும் பாலியின் எட்டு பிராந்தியங்களில் ஆறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

சர்வதேச விமான நிலையம் உட்பட முக்கிய வீதிகள் தடைபட்டுள்ளன. சில பகுதிகளில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.

ஆறுகள் கரைகளை புரண்டதால் மக்கள் வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டதால் பெரும் அளவிலான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களில் வெளிநாட்டினர் எவரும் இல்லை என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

வெள்ளத்தில் மூழ்கிய பல கட்டிடங்களில் இருந்து மீட்புப் பணியாளர்கள் இன்னும் தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர். மேலும் வீதிகளில் சேறு, குப்பைகள் மற்றும் பாறைகளை அகற்ற சுமார் 500 இராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

“மழையின் உச்சம் கடந்துவிட்டது. பொதுவாக தண்ணீர் வடிந்துவிட்டது. தற்போது, வீதிகளில் இருந்து சேற்றை அகற்றுவதில் கவனம் செலுத்துகிறோம்.

இந்தோனேசியாவின் கிழக்கு நுசா தெங்காராவிலும் கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி  நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்ணீர் என நினைத்து கழிவறை சுத்திகரிப்பு...

2026-07-13 16:16:01
news-image

ஜுராசிக் பார்க் திரைப்படத் தொடரின் நடிகர்...

2026-07-13 14:15:05
news-image

அமெரிக்கா - ஈரான் போர் நடவடிக்கைகளினால்...

2026-07-13 11:56:10
news-image

பங்களாதேஷில் கடும் மழை : வெள்ளப்...

2026-07-13 10:51:37
news-image

வெனிசுவேலாவை உலுக்கிய இரட்டை பூமியதிர்ச்சி: பலி...

2026-07-13 10:59:16
news-image

ஐரோப்பாவில் வெப்ப அலையினால் ஜூன் மாத...

2026-07-13 09:44:43
news-image

தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கில் உள்ள பிரபல...

2026-07-13 06:25:54
news-image

அமெரிக்க - ஈரான் மோதல் தீவிரம்:...

2026-07-13 06:23:14
news-image

கத்தாரில் வான்வெளியில் ஏவுகணை இடைமறிப்பு: சிதறிய...

2026-07-12 17:23:53
news-image

ஓமான் கடற்கரையில் கப்பல் மீது தாக்குதல்:...

2026-07-13 12:29:24
news-image

ஈரான் ஏவிய ஏவுகணைகள், ட்ரோன்களை இடைமறித்தது...

2026-07-12 14:43:09
news-image

கத்தாரின் முன்னாள் அமீர் ஷேக் ஹமத்...

2026-07-12 13:01:57