இலங்கை அரச அதிகாரிகளுக்கு இந்தியாவில் சிறப்பு பயிற்சி

Published By: Digital Desk 3

11 Sep, 2025 | 02:19 PM
image

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஏப்ரல் 2025 இல் இலங்கைக்கு விஜயம் செய்தபோது விடுத்த அழைப்பைத் தொடர்ந்து, இலங்கை அரசாங்கத்தின் ஊடக அதிகாரிகளுக்கான ஒரு சிறப்பு பயிற்சித் திட்டம் இந்தியாவில் வெற்றிகரமாக நடைபெற்றது. ஆகஸ்ட் 17 முதல் 30, 2025 வரை நடைபெற்ற இந்த இரு வார காலப் பயிற்சியில், 30 பேர் கொண்ட இலங்கை அதிகாரிகள் குழு பங்கேற்றது.

இந்த பயிற்சித் திட்டம், இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, இலங்கை அரசின் தகவல் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது.பிரதமரின் ஊடகப் பிரிவு, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு மற்றும் அரசாங்க தகவல் திணைக்களம் ஆகியவற்றிலிருந்து அதிகாரிகள் இந்தப் பயிற்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பொது இராஜதந்திரம், பத்திரிகை உறவுகள், டிஜிட்டல் ஊடகப் பயன்பாடுகள் மற்றும் ஊடக மேலாண்மை போன்ற தலைப்புகளில் ஊடாடும் அமர்வுகள் இந்தத் திட்டத்தில் இடம்பெற்றிருந்தன.

இந்த சிறப்பு பயிற்சி, இந்தியாவின் முதன்மை நிறுவனங்களான சுஷ்மா சுவராஜ் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபாரின் சர்வீஸ் (SSIFS), இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன் (IIMC) மற்றும் பிரஸ் இன்ஃபர்மேஷன் பீரோ (PIB) ஆகியவற்றால் நடத்தப்பட்டது.

பயிற்சியில் கலந்துகொண்ட அதிகாரிகள், ஒடிசா மாநிலத்தில் உள்ள கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆஃப் இண்டஸ்ட்ரியல் டெக்னாலஜி (KIIT), ஒடிசா மாநில இடர் மேலாண்மை ஆணையம் (OSDMA) மற்றும் கலிங்கா ஸ்டேடியம் போன்ற முக்கிய இடங்களுக்கும் விஜயம் செய்தனர். ஒடிசா முதலமைச்சரை சந்தித்த அவர்கள், இரு நாடுகளுக்கும் இடையிலான ஊடகம் மற்றும் பொதுத் தொடர்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விவாதித்தனர்.

இந்த சிறப்பு பயிற்சித் திட்டம், தொழில்முறை நிபுணத்துவம், அறிவுப் பகிர்வு மற்றும் இரு நாடுகளுக்கும் இடையே ஊடகம் மற்றும் தகவல் தொடர்புத் துறையில் நிறுவன ரீதியான உறவுகளை மேம்படுத்த உதவியது. இது இரு நாட்டு உறவுகளுக்கு மேலும் வலுசேர்த்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு சர்வதேச இலக்கிய விழா 24ஆம்...

2026-07-14 13:54:13
news-image

சென்னையில் பொ.ஐங்கரநேசனின் 'வேர் முகங்கள்' நூல்...

2026-07-13 18:38:46
news-image

யாழ்ப்பாணம் இணுவில் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா 

2026-07-13 15:47:26
news-image

“உண்டியலில் சேமிப்போம் – உயர்கல்வியை எட்டிப்பிடிப்போம்”:...

2026-07-13 13:34:36
news-image

தலைமைத்துவ சவால் போட்டியில் அகில இலங்கை...

2026-07-13 09:58:33
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தில் புதிய...

2026-07-12 16:52:07
news-image

உலக தமிழ் கலை பண்பாட்டு கலைக்கூடத்தின்...

2026-07-07 20:27:29
news-image

காரைநகர் ஸ்ரீ சுந்தரேஸ்வரர் ஆலய மஹா...

2026-07-05 17:27:50
news-image

செல்வி. சஞ்­சனா கிரு­ஷானின் பர­த­நாட்­டிய அரங்­கேற்றம்

2026-07-05 16:18:27
news-image

ஸ்காபுறோ பொது வைத்தியசாலைக்கு 5 இலட்சம்...

2026-07-05 13:05:04
news-image

இலங்கை இளம் கத்தோலிக்க மாணவர் இயக்கத்தின்...

2026-07-05 11:55:35
news-image

கொழும்புத் திட்டம் அமைப்பின்  75 ஆவது...

2026-07-05 10:32:44