வத்தேகம பாரதி தமிழ் மாகாவித்தியாலயத்தில்  தரம் 7 இல் கல்விகற்கும் 13 வயதுடைய மாணவனொருவன் புதிய வகையான முச்சக்கர வண்டியொன்றை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார்.

விஷ்ணுதர்சன் என்ற தமிழ் மாணவனே குறித்த முச்சக்கர வண்டியை தாயாரித்துள்ளார்.

இவ்வாறு கண்டுபிடிக்கப்பட் முச்சக்கரவண்டியானது எவ்வித எரிபொருளோ, மின்சக்தியோ அன்றி முற்றுமுழுதாக சூரியசக்தியில் இயங்கக்கூடிய ஆற்றல் உடையது என்பது இதன் முக்கிய அம்சமாகும்.