சந்தைப்படுத்தப்படும் இலங்கையின் முன்னோடி உணவு வர்த்தக நாமமான KIST நிலைபேண்தகு விவசாயம் மற்றும் கிராமிய ஊக்குவிப்புக்காக Deutsche Gesellschaft für Internationale Zusammenarbeit (GIZ) GmbH நிறுவனத்துடன் கிளிநொச்சி பிரதேசத்தில் கற்றாழை விவசாயத்தை மேற்கொள்வதற்கான உடன்படிக்கையொன்றை கைச்சாத்திட்டது.
தனியார் துறையுடனான ஒருங்கிணைந்த மேம்பாட்டு கூட்டாண்மை (IDPP) ஒப்பந்தமானது, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சின் மேலதிக செயலாளர் (தொழிற்பயிற்சி) திருமதி. சமந்தி சேனாநாயக்க, இலங்கை GIZ -தொழிற்பயிற்சித் திட்டத்தின் தலைவர் திரு. ஃபபியோ ஜெர்மனோ மற்றும் Cargills Food and Beverage Limited நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளர் திரு. அர்ஜுன குமாரசிங்க, காகில்ஸ் குழு முகாமையாளர் – விவசாய வணிகம் திரு.ஹரிதாஸ் ஃபெர்னாண்டோ உள்ளிட்ட காகில்ஸ் நிறுவனத்தின் முக்கிய பிரமுகர்களின் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டது.
விவசாய ரீதியிலான ஆதரவுக்கு அப்பாற்பட்டு, வங்கி சேவைகள் இல்லாத விவசாயிகளை முறையான நிதியியல் அமைப்புடன் ஒருங்கிணைப்பதன் ஊடாக கிராமப்புற சமூகங்களை அபிவிருத்தி செய்யும் நோக்கத்துடன் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. கார்கில்ஸ் வங்கியின் ஊடாக, பங்கேற்கும் விவசாயிகளுக்கு அத்தியாவசிய நிதி சேவைகள் மற்றும் கடன் வசதிகளை பெற்றுக்கொள்ள முடியும். உற்பத்தியில் பயன்படுத்தப்படும் கற்றாழை இலைகளின் பாதுகாப்பினையும் ஆரோக்கியத்தினையும் உறுதிப்படுத்த, விவசாயிகள் இரசாயனம் அல்லாத களை மற்றும் பூச்சி கட்டுப்பாட்டு நடைமுறைகளை பின்பற்றுவதற்கும் வழிகாட்டப்படுவார்கள்.
KIST கற்றாழை பானம் கட்டானவில் உள்ள Cargills Food and Beverage Ltd நிறுவனத்தின் அதிநவீன தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகிறது. இந்த தொழிற்சாலை ISO 9001, ISO 22000, HACCP, GMP, SLS மற்றும் ஹலால் தரநிலைகளுக்கான சான்றிதழ்களைப் பெற்றுள்ளது.

















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM