கழுத்து வீக்க பாதிப்பிற்கான நவீன நிவாரண சிகிச்சை

Published By: Vishnu

11 Sep, 2025 | 04:08 AM
image

இன்றைய சூழலில் எம்மில் பலருக்கும் கழுத்துப் பகுதியில் வீக்கம் ஏற்பட்டிருக்கும். இந்தத் தருணத்தில் வைத்தியசாலைக்குச் சென்று பரிசோதனை மேற்கொள்ளும் போது வைத்தியர்கள் தைரொய்ட் தொடர்பான பரிசோதனைகளையும் மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரை செய்வார்கள். இந்த இத்தகைய பரிசோதனையில் தைரொய்ட் சுரப்பியில் முடிச்சுகள் ஏற்பட்டு, அதன் காரணமாக கழுத்து வீக்கம் பாதிப்பு ஏற்பட்டிருந்தால்.. அதனை தைரொய்ட் நோடுல்ஸ் அப்ளேசன் எனும் நவீன நிவாரண சிகிச்சை மூலம் முழுமையான நிவாரணம் வழங்க இயலும் என வைத்தியர்கள் தெரிவிக்கிறார்கள்.

இத்தகைய சிகிச்சையின் போது அல்ட்ரா சவுண்ட் மற்றும் ஸ்கேன் பரிசோதனை மூலம் தைரொய்ட் சுரப்பியின் செயல்பாடு மற்றும் அமைப்பு குறித்த பரிசோதனையை மேற்கொள்வார்கள். இதன் முடிவுகளின் அடிப்படையில் இந்த தைரொய்ட் சுரப்பியில் ஏற்பட்டிருக்கும் முடிச்சுகளுக்கு நிவாரணமளிப்பதற்கான சிகிச்சையை தீர்மானிப்பார்கள். இதில் ரேடியோஃப்ரீக்குவன்சி அப்ளேஷன் என்பது தனித்துவமான நவீன நிவாரண சிகிச்சையாகும். இது தோல் பகுதியில் செயல்படுத்தப்படும் சத்திர சிகிச்சையற்ற சிகிச்சை முறை. இதன் போது தோல் வழியாக பிரத்யேக ஒளியை பாய்ச்சி தைரொய்ட் சுரப்பியின் முடிச்சுகள் மீது செலுத்துவார்கள். இதனால் அவற்றின் அளவில் மாற்றம் ஏற்பட்டு நிவாரணம் கிடைக்கும். பொதுவாக இத்தகைய சிகிச்சை ஆறு முதல் எட்டு மாதம் வரை சில நோயாளிகளுக்கு மேற்கொள்ள வேண்டியதிருக்கும்.

இத்தகைய தீங்கற்ற தைரொய்ட் கட்டிகள் அல்லது முடிச்சுகளை இத்தகைய ஒளி ஊடுருவு சிகிச்சை மூலம் நிவாரணம் அளித்து வருவது.. சதவீத அடிப்படையில் சாதகமான பலன்கள் அதிகம் என்பதால், இதற்கு நோயாளிகளிடத்தில் பாரிய வரவேற்பு இருக்கிறது.‌மேலும் இத்தகைய சிகிச்சையை மேற்கொள்ளும் போது வைத்தியர்கள் பரிந்துரைக்கும் வாழ்க்கை நடைமுறை மற்றும் உணவு முறை மாற்றத்தை உறுதியாக கடைப்பிடிக்க வேண்டியதிருக்கும்.

வைத்தியர்: நரேன்

தொகுப்பு: அனுஷா

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குரல் பாதிப்பை துல்லியமாக அவதானிக்கும் நவீன...

2026-07-18 16:04:06
news-image

ஃபோகல் டிஸ்டோனியா எனும் நரம்பியல் இயக்க...

2026-07-17 16:09:06
news-image

பெம்பிகஸ் வல்காரிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2026-07-15 15:09:00
news-image

விரை வீக்க பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2026-07-14 17:28:48
news-image

கோரொய்ட் பிளெக்ஸஸ் சிஸ்ட் எனும் சிசுவின்...

2026-07-13 17:19:36
news-image

மூட்டுகளை பாதுகாக்கும் நவீன சத்திர சிகிச்சை-...

2026-07-11 17:00:24
news-image

பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் பைலோரிக்ஸ்டெனோசிஸ் பாதிப்புக்குரிய...

2026-07-10 15:17:29
news-image

ஹைட்ராடெனிடிஸ் சுப்புராடிவா எனும் நாட்பட்ட தோல்...

2026-07-09 18:34:05
news-image

ஜெனிகுலர் ஒர்டரி எம்போலைசேஷன் எனும் மூட்டு...

2026-07-08 15:00:48
news-image

செரிப்ரோஸ்பைனல் திரவ ரைனோரியா எனும் பாதிப்பிற்குரிய...

2026-07-07 17:15:38
news-image

பிலியரி அட்ரேசியா எனும் பச்சிளம் குழந்தைகளுக்கு...

2026-07-06 15:23:11
news-image

ரெட்டினோபிளாஸ்டோமா எனும் அரிய வகை கண்...

2026-07-04 15:11:03