தொகுப்பு: சுபயோக தாசன்
எம்மில் சில பெற்றோர்கள் தங்களுடைய பெண் பிள்ளையின் திருமணம் குறித்து கவலை கொள்வார்கள். அவர்கள் 'உயர்கல்வியை நிறைவு செய்தவுடன் திருமணம் செய்து கொள்' என்று பெற்றோர்கள் அறிவுறுத்தினால்... 'சுயமாக சம்பாத்தியம் செய்த பிறகு தான் திருமணம் செய்து கொள்வேன் ' என்று கூறி பெற்றோர்களை மௌனிக்கச் செய்து விடுவார்கள்.
வேலைக்குச் சென்று ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திருமணம் செய்து கொள் என்று சொன்னால்... சொந்தமாக காணி வாங்கி, வீடு கட்டிய பிறகு தான் திருமணம் செய்து கொள்வேன் என்று சொல்லி பெற்றோர்களை மீண்டும் மௌனிக்கச் செய்து விடுவார்கள். இவர்கள் 35 வயதிற்கு பிறகு திருமணத்திற்கும், குழந்தை பேற்றிருக்கும் ஒரே நேரத்தில் மனதளவில் தயாராகி, ஏக்கம் ஏற்படும் போது அவர்களுக்கு திருமண வாய்ப்பு என்பது கிட்டாமலே இருக்கும் அல்லது தாமதமாகும்.
அந்தத் தருணத்தில் அவர்கள் வேறு வழி இல்லாமல் ஆன்மீக ரீதியிலான வழியிலான முயற்சியை மேற்கொள்வார்கள். இத்தகைய தருணத்தில் அவர்களுடைய ஜாதகத்தை துல்லியமாக அவதானிக்கும் போது களத்திர தோஷத்தாலும்... கால சர்ப்ப தோஷத்தாலும் அவர்கள் பாதிக்கப்பட்டு இருப்பதை புரிந்து கொள்வார். இதற்காக எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் சூட்சமமான வழிபாட்டை முன்மொழிந்திருக்கிறார்கள்.
இவர்கள் தங்களது வீட்டுக்கு அருகே இருக்கும் புற்று கோயிலுக்கு நாளாந்தம் செல்ல வேண்டும் அல்லது உங்களது பிறந்த கிழமையில் செல்ல வேண்டும். அங்குள்ள சர்ப்ப சிலைகளுக்கு அபிஷேகம் செய்வது... மலர்க் சாற்றுவது ... தீபம் ஏற்றுவது ...போன்ற வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.
அந்த புற்று ஆலய நிர்வாகத்தின் அனுமதியைப் பெற்று சிறிதளவு புற்றுமண்ணை வாங்கி வீட்டிற்கு எடுத்து வந்து அதனை தண்ணீரில் கலந்து உடல் முழுவதும் பூசிக்கொண்டு பத்து நிமிடம் ஓய்வெடுத்து அதன் பிறகு நீராடினால் உங்களுடைய களத்திர தோஷம் நீங்கும்.
இதனைத் தொடர்ந்து அரசாங்க வைத்திய சாலைகளில் எதிர்பாராமல் அகால மரணமடையும் ஏழை மற்றும் ஆதரவற்றவர்களுக்கு.. அவர்களுடைய சடலம் இறுதிச்சடங்கு காண்பதற்கும்... அல்லது ஓரிடத்தில் இருந்து மற்ற வருடத்திற்கு பயணிக்கவும்... உங்களாலின பொருள் உதவிகளை செய்ய வேண்டும். இதனை ஏதேனும் ஒரு வகையில் செய்யத் தொடங்கினால் ஆறு மாதத்திற்குள்ளாகவே உங்களின் மனம் கவர்ந்த வரன் அமைந்து இல்லற வாழ்க்கை சுகமாகும்.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM