லண்டன் உலக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டியில் 4 இலங்கையர் பங்கேற்பு

By Priyatharshan

29 Jul, 2017 | 03:00 PM
image

லண்­டனில் நடை­பெ­ற­வுள்ள உலக மெய்­வல்­லுநர் போட்டித் தொட­ருக்கு இலங்­கை­யி­லி­ருந்து பங்­கேற்க நால்வர் தகு­தி­பெற்­றுள்­ளனர்.

எதிர்­வரும் ஆகஸ்ட் மாதம் 4ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரை நடை­பெ­ற­வுள்ள உலக மெய்­வல்­லுநர் சம்­பி­யன்ஷிப் போட்டித் தொடர் லண்­டனில் நடை­பெ­ற­வுள்­ளது. 

200 நாடு­களைச் சேர்ந்த சுமார் 2000 வீர, வீராங்­க­னைகள் கலந்­து­கொள்­ள­வுள்ள லண்டன் உலக மெய்­வல்­லுநர் சம்­பி­யன்ஷிப் தொடரின் ஏற்­பாட்­டுக்­கு­ழு­வினால் அறி­விக்­கப்­பட்­டுள்ள அடைவு மட்­டத்­தின்­படி மரதன் போட்­டி­க­ளுக்­காக அநு­ராத இந்­தி­ரஜித் குரே மற்றும் ஹிருணி விஜே­ரத்ன ஆகியோர் ஏற்­க­னவே நேர­டி­யாகத் தகு­தி­பெற்­றுக்­கொண்­டனர்.

அத்­துடன் இந்­தி­யாவின் புவ­னேஸ்­வரில் இம்­மாத முற்­ப­கு­தியில் நடை­பெற்ற 22ஆவது ஆசிய மெய்­வல்­லுநர் போட்டித் தொடரில் இலங்­கைக்­காக ஒரே­யொரு தங்கப் பதக்­கத்­தினை வென்று கொடுத்த நிமாலி லிய­னா­ரச்சி (800 மீற்றர்) உலக மெய்­வல்­லுநர் போட்­டி­க­ளுக்­கான அடை­வு­மட்­டத்தை பூர்த்தி செய்­யாத போதிலும், ஆசி­யாவில் முத­லி­டத்தைப் பெற்­றுக்­கொண்­டதால் குறித்த போட்­டி­களில் பங்­கேற்கும் வாய்ப்­பினைப் பெற்­றுக்­கொண்டார்.

இதே­வேளை, ஈட்டி எறிதல் வீரர் வருண லக் ஷான் தயா­ரத்ன குறித்த போட்­டிக்­கான தரப்­ப­டுத்­தலில் 29ஆவது இடத்தைப் பெற்­றுக்­கொண்­டுள்­ளதால் பெரும்­பாலும் அவ­ருக்கும் இப்­போட்டித் தொடரில் பங்­கேற்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்­பார்க்­கப்­பட்­டது.

பொது­வாக உலக மெய்­வல்­லுநர் போட்­டி­க­ளுக்­கான உலக தரப்­ப­டுத்­தலில் முதல் 32 இடங்­களில் உள்ள வீரர்­க­ளுக்கு முதல் சுற்றில் பங்­கேற்கும் வாய்ப்பு கிட்டும். 

அதன்­படி வருண லக் ஷான் இதில் பங்கேற்பது தொடர்பான இறுதி முடிவு  அறிவிக்கப்பட்டது. குறித்த அறிவிப்புக்கு அமைய இலங்கையின் நான்காவது வீரராக அவரும் லண்டன் பயணமாகவுள்ளார்.

இந்தப் போட்டித் தொடரு டன் உலகின் அதிவேக ஓட்ட வீரரான உசைன் போல்ட் தனது ஓய்வை அறிவிக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ருசோவ் அபார சதம் : தென்னாபிரிக்காவுக்கு...

2022-10-05 09:19:09
news-image

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர்...

2022-10-04 21:17:20
news-image

இலங்கையின் ரஞ்சன் மடுகல்ல, குமார் தர்மசேன...

2022-10-04 16:01:06
news-image

மகளிர் இருபது 20 ஆசியக் கிண்ண...

2022-10-03 11:55:48
news-image

துடுப்பாட்டத்தில் மாலன், பந்துவீச்சில் வோக்ஸ் அசத்தல்...

2022-10-03 09:45:51
news-image

மில்லரின் அதிரடி வீண் : தென்னாபிரிக்காவை...

2022-10-03 10:49:34
news-image

கிரிக்கெட்டை போலவே கால்பந்தையும் பிரபலமாக்குவதே தனது...

2022-10-02 13:58:36
news-image

திறந்த சர்வதேச கராத்தே சுற்றுப்போட்டி

2022-10-02 12:37:19
news-image

மேல்மாகாண காட்டா சுற்றுபோட்டி

2022-10-02 12:02:04
news-image

மகளிர் ஆசிய கிண்ண இருபது -...

2022-10-02 10:48:45
news-image

இந்திய லெஜெண்ட்ஸ் சம்பியன் பட்டத்தை தக்கவைத்தது...

2022-10-02 10:47:18
news-image

பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா ?...

2022-10-01 12:20:06