அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தில் கடற்­படை சார்ந்த செயற்­பா­டுகள் எவற்­றையும் முன்­னெ­டுக்க கூடா­தென அர­சாங்கம் சீனா­விற்கு அழுத்­த­மாக தெரி­வித்­துள்­ள­தாக அமைச்சர் நவீன் திஸா­நா­யக்க தெரி­வித்தார்.

இதன் கார­ண­மா­கவே அம்­பாந்­தோட்டை துறை­முக விவ­கா­ரத்தில்  இந்­தியா மற்றும் அமெ­ரிக்­காவின் கடு­மை­யான எதிர்ப்பு குன்­றி­யுள்­ள­தா­கவும் அவர்  சுட்­டிக்­காட்­டினார்.

மஹ­ர­கமை ஐக்­கிய தேசிய கட்­சியின் இளைஞர் அணியின் தலை­மை­ய­கத்தில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

அம்­பாந்­தோட்டை துறை­முக நிர்­மா­ணப்­ப­ணி­க­ளுக்கு சீனா­வி­டத்­தி­லி­ருந்து பெறப்­பட்ட பணத்தை மீளச் செலுத்­தா­தி­ருக்­கவே அத்­து­றை­மு­கத்தை 99 வரு­டங்கள் குத்­த­கைக்கு வழங்க அர­சாங்கம் தீர்­மா­னித்­தது.

இதனால் எமது நாட்­டிற்கு எவ்­வித பாதிப்­புக்­களும் ஏற்­ப­டாது எமக்கு அவ­சி­ய­மான போது பணத்தை செலுத்­தி­விட்டு துறை­மு­கத்­தினை மீ்றப்­பெற முடியும் தற்­போது.

முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க ஸ்ரீ லங்கா எயார் லய்ன்ஸ் நிறு­வ­னத்தை இவ்­வாறு குத்­த­கைக்கு வழங்­கி­யி­ருந்த போது அதனை முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ அவரின் ஆட்­சி­க் கா­லத்தில் பணத்தை செலுத்தி மீளப்­பெற் றார். அதற்கு நிக­ரான முறையே அம்­பாந்­தோட்டை துறை­முக விவ­கா­ரத்­திலும் கையா­ளப்­ப­டு­கின்­றது.

எவ்­வா­றா­யினும் அம்­பாந்­தோட்டை துறை­முகம் ஆரம்­பிக்கப்­பட்ட போது அது தொடர்­பி­லான சரியான திட்­ட­மி­டல்கள் இருக்­க­வில்லை என்­ப­தையும் அதனால் பொரு­ளா­தார மேம்­பாட்டை ஏற்­ப­டுத்தும் வழி­மு­றையும் செய்­தி­ருக்­கப்­ப­ட­வில்லை என்­ப­தையும் நாம் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தோம்.

இன்று அதனை பய­னுள்­ள­தாக மாற்ற நினைக்­கின்ற போது கூட்டு எதி­ரணி அதனை தடுக்க முயற்­சித்­தாலும் அவர்­களின் முயற்சி சாத்­தி­யப்­ப­டாது. காரணம் தற்­போ­தைய அர­சாங்கம் அம்­பாந்­தோட்டை துறை­முக விவ­காரம் தொடர்பில் சரி­யான நேரத்தில் சரி­யான டீல் ஒன்றை செய்­துக்­கொண்­டுள்­ளது.

எவ்­வா­றா­யினும் இந்த ஒப்­பந்தத்தில் மேற்­படி துறை­மு­கத்தில் துரித அபி­வி­ருத்தி செயற்­பா­டு­களை ஏற்­ப­டுத்தி காட்டும் வழி­மு­றையை பற்றி சீன நிறு­வனம் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது. அத­னா­லேயே ஒப்­பந்தத்­திற்கு இணக்கம் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மேலும் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் சீனாவின் கடற்படை செயற்பாடுகள் எவற் றையும் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் முன்னெடுக்க முடியாது என்ற விடயம் அழுத்தமாகவே வலியுறுத்தப்பட்டுள்ளது. அதனாலேயே இந்த விவகாரத்தில் அமெ ரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளின் அழுத்தமும் குறைந்துள்ளது என்றார்.