அமெ­ரிக்க டெக் ஸாஸ் மாநி­லத்தில் படு­கொலைக் குற்­ற­வா­ளி­யொ­ரு­வ­ருக்கு  விஷ ஊசி­யேற்றி மர­ண­தண்­டனை நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.

தாய்சின் பிரேயர் என்ற மேற்­படி கைதியின் சார்பில் தாக்கல் செய்­யப்­பட்ட இறுதி நேர மேன்­மு­றை­யீட்டை அந்­நாட்டு உச்ச நீதி­மன்றம் நிரா­க­ரித்­த­தை­ய­டுத்தே அவ­ருக்­கான தண்­டனை நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.  பிரேயர் (46  வயது)  என்ற மேற்­படி நபர் 2004  ஆம் ஆண்டு கொள்ளை நட­வ­டிக்­கை­யொன்றின் போது போதை­வஸ்தை உப­யோ­கித்த நிலையில் ஜமி தக்கெட் என்­ப­வரை படு­கொலை செய்­த­தாக குற்­றஞ்­சாட்­டப்­ப­டு­கி­றது.  

இதன்­போது  தக்கெட் மீது பல தட­வைகள்  கத்திக்குத்துப் பிர­யோகம் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­த­துடன் அவ­ரது கழுத்தும் வெட்­டப்­பட்­டி­ருந்­தது.

இந்­நி­லையில் தற்­பா­து­காப்புக் கரு­தியே பிரேயர் மேற்­படி தாக்­கு­தலை நடத்தியிருந் ததாக அவரது சட்டத்தரணியால் முன் வைக்கப்பட்ட  வாதத்தை நீதிபதி நிராகரித் துள்ளார்.