கத்தாரிலுள்ள ஹமாஸ் தலைமையகம் மீது இஸ்ரேல் தாக்குதல் !

09 Sep, 2025 | 09:56 PM
image

இஸ்ரேல்-ஹமாஸ் போர் சுமார் இரண்டு ஆண்டுகளாக நீடித்துவரும் நிலையில், இஸ்ரேல் இன்று கத்தார் தலைநகர் தோஹாவில் உள்ள ஹமாஸ் அரசியல் பிரிவு தலைமையகத்தை குறிவைத்து வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் இருவர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

அக்டோபர் 7, 2023-இல் இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு நேரடியாக காரணமான ஹமாஸ் தலைவர்களை அழிப்பதே இந்தத் தாக்குதலின் நோக்கம் என இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

காசா போர் மற்றும் பிணைக்கைதிகள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஹமாஸ் குழுவுக்கு கத்தார் அரசு ஆதரவு அளித்து வருகிறது. ஹமாஸ் அரசியல் பிரிவின் அலுவலகம் தோஹாவில் செயல்பட்டு வருவதும் இந்தத் தாக்குதலுக்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.

தற்போது, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் மற்றும் பிணைக்கைதிகள் விடுதலை குறித்து கத்தார் அரசு மூலமாக பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் நிலையில், இந்தத் தாக்குதல் மத்திய கிழக்கில் ஒரு பதற்றமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு கத்தார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. "இது பொறுப்பற்ற இஸ்ரேலிய செயல் மற்றும் பிராந்திய பாதுகாப்பை சீர்குலைக்கும் ஒரு செயல்" என்று கத்தார் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2023 அக்டோபர் 7-ஆம் திகதி ஹமாஸ் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் 1,195 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் காசாவில் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த இரு தரப்புக்கும் இடையிலான போரில் இதுவரை 64,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இன்னும் 48 இஸ்ரேலிய பிணைக்கைதிகள் ஹமாஸ் பிடியில் உள்ளனர். அவர்களை விடுவிக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.

இந்தத் தாக்குதல், மத்திய கிழக்கில் ஏற்கனவே நிலவி வரும் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானில் எல்லாம் அழிந்துவிட்டது ; மொஜ்தபா...

2026-07-14 13:04:47
news-image

சவூதி அரேபியா மீது ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள்...

2026-07-14 12:58:29
news-image

ஐக்கிய அரபு அமீரகத்தின் 2 கப்பல்கள்...

2026-07-14 12:28:49
news-image

நயாகரா நீர்வீழ்ச்சியில் விழுந்து உயிர்தப்பிய நபர்!

2026-07-14 12:27:48
news-image

மத்திய கிழக்கு பதற்றம்: உலக சந்தையில்...

2026-07-14 07:20:14
news-image

தண்ணீர் என நினைத்து கழிவறை சுத்திகரிப்பு...

2026-07-13 16:16:01
news-image

ஜுராசிக் பார்க் திரைப்படத் தொடரின் நடிகர்...

2026-07-13 14:15:05
news-image

அமெரிக்கா - ஈரான் போர் நடவடிக்கைகளினால்...

2026-07-13 11:56:10
news-image

பங்களாதேஷில் கடும் மழை : வெள்ளப்...

2026-07-13 10:51:37
news-image

வெனிசுவேலாவை உலுக்கிய இரட்டை பூமியதிர்ச்சி: பலி...

2026-07-13 10:59:16
news-image

ஐரோப்பாவில் வெப்ப அலையினால் ஜூன் மாத...

2026-07-13 09:44:43
news-image

தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கில் உள்ள பிரபல...

2026-07-13 06:25:54