பலஸ்தீனத்தின் விடுதலை மற்றும் அமைதிக்காகவே நாங்கள் செயற்படுகிறோம் - பிமல் ரத்நாயக்க

09 Sep, 2025 | 09:25 PM
image

(எம்.ஆர்.எம் வசீம்,இராஜதுரை ஹஷான்)

சுதந்திர பாலஸ்தீனம் உருவாக வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளோம். இந்தியாவில் உள்ள  இஸ்ரேல் தூதரகத்துக்கு இலங்கையின் ஊடகவியலாளர்களை அழைத்துச் சென்று, அவர்களை இலங்கையின் தூதுவர் புகைப்படமெடுத்துள்ளார்.இந்நிலைக்கு செயற்பட்டுள்ளதையிட்டு தனிப்பட்ட முறையில் கவலையடைகிறேன் என  சபை முதல்வர்  பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (09) நடைபெற்ற இலங்கைக்கும், ஐக்கிய அரபு இராச்சியத்துக்கும்  இடையிலான பல்துறை ஒப்பந்தம்  தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர்   மேலும் உரையாற்றியதாவது,

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரின் போது இலங்கையின்  இறையாண்மையை பாதுகாப்பதற்காக இலங்கைக்கு ஆதரவளித்த நாடுகளுக்கு  கௌரமளிக்கிறோம்.இலங்கையின் தற்போதைய முன்னேற்றம் மற்றும் மக்களின் அரசியல் தீர்மானங்களை அடிப்படையாகக் கொண்டு தீர்மானங்களை எடுங்கள் என்று உலக நாடுகளில் கேட்டுக்கொள்கிறோம்.

சுதந்திர பாலஸ்தீனம் உருவாக வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளோம். இந்தியாவில் உள்ள  இஸ்ரேல் தூதரகத்துக்கு இலங்கையின் ஊடகவியலாளர்களை அழைத்துச் சென்று அவர்களை இலங்கையின் தூதுவர் புகைப்படமெடுத்துள்ளார். இந்நிலைக்கு தனிப்பட்ட முறையில் கவலையடைகிறேன்.

இலங்கையின் ஊடகவியலாளர்கள் காஸாவுக்கு சென்று புதிதாக கற்றுக்கொள்வதற்கு ஒன்றுமில்லை. அங்கு  சுடுகாடு தான் உள்ளது.துறைமுக அதிகார சபையின் ஒருவர் இஸ்ரேல் சென்றதாக குறிப்பிடப்படுகிறது.இதனை ஆராய்ந்து பார்த்தேன்.அந்த நபர் தனிப்பட்ட பயணத்துக்காகவே சென்றுள்ளார். பலஸ்தீனத்தின் விடுதலை மற்றும் அமைதிக்காகவே நாங்கள் செயற்படுகிறோம் எமது கொள்கையில் எவ்வித மாற்றமுமில்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாணவர்கள் தமது இலக்கை நோக்கி பயணிக்க...

2026-08-08 15:22:13
news-image

உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது...

2026-08-08 14:56:36
news-image

இரத்மலானையில் ஆயுதங்கள், கைக்குண்டு மற்றும் பணத்துடன்...

2026-08-08 14:36:20
news-image

பதுளையில் புதையல் தோண்டி எடுக்கும் நோக்கில்...

2026-08-08 13:20:57
news-image

உயர்தர பரீட்சார்த்திகள் பொறுப்புடன் செயற்பட வேண்டும்...

2026-08-08 13:56:21
news-image

இலங்கை தபால்துறையை நவீனமயப்படுத்துதல் குறித்த கலந்துரையாடல்

2026-08-08 13:51:43
news-image

கட்டானையில் 75 லீற்றர் சட்டவிரோத மதுபானத்துடன்...

2026-08-08 13:20:07
news-image

கிளிநொச்சி திருவையாறுப் பகுதியில் நான்கு ஏக்கர்...

2026-08-08 13:47:48
news-image

கடல் கொந்தளிப்பு எச்சரிக்கை: மீனவ சமூகத்திற்கு...

2026-08-08 13:13:25
news-image

நாடு தழுவிய சோதனைகளில் 431 தரமற்ற...

2026-08-08 13:05:24
news-image

தொம்பகஹவெல - பஹதராவ குளத்தில் நீராடச்...

2026-08-08 12:48:03
news-image

இலங்கை சிறைகளில் உள்ள இந்திய மீனவர்கள்...

2026-08-08 11:54:45