(எம்.ஆர்,எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
நாடளாவிய ரீதியில் நீண்ட காலமாக வீட்டு உறுதிப் பத்திரம் இல்லாத நிலையில் உள்ளவர்களுக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்கும் விசேட வேலைத் திட்டம் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட இருக்கிறது. அதன் முதற்கட்டமாக எதிர்வரும் அக்டோபர் மாதம் 6ஆம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் 1000 பயனாளிகளுக்கு வீட்டு உரிமைப் பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என வீடமைப்பு அமைச்சர் அநுர கருணாதிலக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (09) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் மஞ்சுள சுகத் ரத்னாயக்க எம்பி எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தமது கேள்வியின் போது,
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என அவர் கேள்வியெழுப்பினார். குறிப்பாக அதன் பயனாளிகளுக்கு வீட்டு உறுதிப்பத்திரத்தை வழங்கும் பொது வேலைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமா? என்றும் அவர் வினவினார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர்,
நீண்ட காலமாக பல்வேறு காரணங்களினால் இவ்வாறு பயனாளிகளுக்கு வீடுகளுக்கான வீட்டு உரிமைப் பத்திரம் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில் தற்போதைய அரசாங்கம் துரிதமாக இந்த காணி உறுதிப் பத்திரங்களை வழங்குவதற்கான விசேட வேலைத் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துகிறது.
அந்த வகையில் உலக வீடமைப்பு தினத்தை முன்னிட்டு எதிர்வரும் அக்டோபர் மாதம் 6ஆம் திகதி நீண்ட காலம் கிடப்பில் கிடந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் முதற்கட்டமாக 1000வீட்டு உரிமையாளர்களுக்கு வீட்டு உரிமைப் பத்திரங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் கொழும்பில் பிரதான நிகழ்வு நடைபெறவுள்ளது.
அதேபோன்று இந்தத் திட்டத்தில் வெளி மாவட்டங்களில் உள்ள பயனாளிகளை கொழும்புக்கு அழைக்கும் நோக்கம் எமக்கு கிடையாது. அந்த வகையில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இவ்வாறு வீட்டு உரிமைப் பத்திரம் இல்லாத மக்களுக்கு வீட்டு உரிமையை பெற்றுக் கொடுப்பதற்கு வேலைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். அதற்கிணங்க இந்த வருட இறுதிக்குள் பெரும்பாலானவர்களின் இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என்றார்.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM