(எம்.ஆர்,எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
பலஸ்தீனில் இஸ்ரேல் மேற்கொண்டுவரும் இனப்படுகொலையை கண்டித்து உலக நாடுகள் இஸ்ரேலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகின்றன, அதேநேரம் இஸ்ரேல் இராணுவம் 248 சர்வதேச ஊடகவியலாளர்களை கொலை செய்துள்ள நிலையில் எமது நாட்டில் இருந்து 16 ஊடகவியலாளர்கள் இஸ்ரேலுக்கு சென்றுள்ளனர். அதனால் அரசாங்கம் பலஸ்தீன் தொடரபில் பின்பற்றி வரும் இரட்டை நிலைப்பாட்டை நிறுத்திக்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (09) இடம்பெற்ற இலங்கை குடியரசுக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கும் இடையிலான முதலீடுகள், பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
இலங்கைக்கு அரபு நாடுகளுடன் ஆரம்ப காலம் தொட்டு சிறந்த உறவு இருந்து வருகிறது. அதனாலே எமது நாடு பொருளாதார ரீதியில் பாதிக்கப்படும்போது அரபு நாடுகள் எமக்கு பல்வேறு வகையில் உதவி வருகின்றன. இவ்வாறான நிலையில் தற்காலத்தில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, பரந்துபட்ட இஸ்ரேல் ஒன்றை உருவாக்கப்போவதாக பிரகடனப்படுத்தி இருக்கிறார்.
இதற்காக அவர் இஸ்ரேலை சுற்றியுள்ள அரபு நாடுகளை யுத்தம் ஒன்றுக்கு இழுத்துக்கொள்ளும் கொள்கையில் இருக்கிறார். அவ்வாறான ஒரு நிலை ஏற்பட்டால், நிச்சியமாக அது எமது நாட்டின் பொருளாதாரத்துக்கும் அபிவிருத்திக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.
இஸ்ரேல் காஸாவில் மேற்கொண்டுவரும் இன அழிப்புக்கு எதிராக உலக நாடுகள் இஸ்ரேலுக்கு எதிராக அணிதிரண்டிருக்கின்றன.இஸ்ரேலின் இந்த இன அழிப்பு 2023 ஒக்டோபர் 23ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து இதுவரை 64423 பலஸ்தீனியர்கள்கொள்ளப்பட்டுள்ளனர். அவர்களில் 20ஆயிரம் பேர் குழந்தைகள். அதேபோன்று இஸ்ரேல் காஸாவுக்கு விதித்திருக்கும் உணவுத்தடை காரணமாக 376 பேர் பட்டினியால் மரணித்துள்ளனர். அவர்களில் 131 குழந்தைகள் போஷாக்கின்மையால் மரணித்துள்ளனர்.
அதேபோன்று சர்வதேச ஊடகவியலாளர்கள் 248பேர் இஸ்ரேல் இராணுவத்தினரால் கொலை செய்யப்பட்டிருக்கின்றனர். அதேபாேன்று நிவாரண உதவியாளர்கள் கொலை செய்யப்பட்டிருக்கின்றனர். இஸ்ரேல் இன்று பலஸ்தீனில் மேற்கொண்டுவரும் இன படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த காலங்களில் இஸ்ரேலுக்கு உதவி செய்துவந்த நாடுகளும் தற்போது இஸ்ரேலுக்கு எதிராக செயற்பட ஆரம்பித்துள்ளன. உலகில் அனைத்து நாடுகளிலும் மக்கள் வீதிக்கிறங்கி, இந்த இனப்படுகொலையை நிறுத்துவதற்கு அழுத்தம் கொடுக்குமாறு அவர்களின் அரசாங்கங்களுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். அதனால் ஐராேப்பிய நாடுகளும் இஸ்ரேலுக்கு தடைகளை ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்து வருகின்றன.
இவ்வாறான நிலைமையில் கடந்த மாதம் 30ஆம் திகதி, எமது நாட்டில் இருந்து ஊடகவியலாளர்கள் என 16பேர், இஸ்ரேலுடன் தொடர்புகளை அதிகரித்துக்கொள்ள அங்கு சென்றுள்ளனர்.அதாவது248 ஊடகவியலாளர்களை கொலை செய்த நாட்டுக்கு, ஊடகவியல் தொடர்பில் கற்றுக்கொள்ள எமது நாட்டில் இருந்து 16 ஊடகவியலாளர்கள் சென்றுள்ளனர். இந்த 16பேரில் அரச நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களும் சென்றுள்ளனர்.இஸ\ரேலில் இனப்படுகொலையே இடம்பெறுகிறது என ரொய்டர், சி,என்,என், பி,பி,சி ஊடகங்களும் செய்தி வெளியிட்டு வருகின்றன.
இஸ்ரேலுக்கு சென்றுள்ள ஊடகவியலாளர்கள் 16பேரில் ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் இருந்து 2பேர் சென்றுள்ளனர். இதற்கு ஊடக அமைச்சு அனுமதி வழங்கி இருக்கிறதா என கேட்கிறேன். அதேபோன்று கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் இருந்து விரிவுரையாளர் ஒருவர் சென்றிருக்கிறார்.
துறைமுக அதிகாரசபையின் ஊடக பிரிவின் சிரேஷ்ட முகாமையாளர் நிலந்த இலங்ககமுவ சென்றிருக்கிறார். அரசாங்கம் ஒரு பக்கத்தால், பலஸ்தீனுக்காக குரல் கொடுப்பதாக தெரிவிக்கிறது. அதேநேரம் இனப்படுகொலை செய்துவரும் இஸ்ரேலுக்கு எதிராக உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வரும்போது, ஊடகவியலாளர்கள் 16பேர் அங்கு சென்று எதை கற்றுக்கொள்ளப்போகிறார்கள்.
அதேநேரம் இந்த 16 பேரிர் யுடியூப் அலைவரிசை நடத்தும் இரண்டு பேர் சென்றுள்ளார்கள். இந்த அலைவரிசைகள் இரண்டும் கடந்த காலங்களில் எமது நாட்டில் இன நல்லிணக்கத்துக்கு எதிராக செயற்பட்டவைகளாகும். இவர்கள் மொசாட்டின் பயிற்சிகளை பெற்றுக்காெண்டுவந்து, நாட்டில் பிரச்சினைகளை ஏற்படுத்தவா சென்றுள்ளனர். குற்றப்புலனாய்வு பிரிவு இதுதொடர்பில் விசாரிப்பதில்லையா? கடந்த காலங்களில் பலஸ்தீன் செயற்பாட்டாளர்களின் வீடுகளுக்கு குற்றப்புலனாய்வு அதிகாரிகள் செல்கின்றனர். பலஸ்தீன் தூதரகத்தின் ஊடக பிரிவில் பணியாற்றுகின்றவரின் வீட்டுக்கு குற்றப்புலனாய்வு பிரிவினர் சென்று, இஸ்ரேலுக்கு எதிராக இங்கு பிரசாரம் செய்ய வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளனர். மொசாத்தா எமது பொலிஸை நிர்வகித்து வருகிறார்கள் என கேட்கிறோம்.
அதனால் இந்த 16பேரும் இஸ்ரேலுக்கு எதற்காக சென்றார்கள் என புலனாய்வு பிரிவு விசாரணை மேற்கொள்ள வேண்டும்.இவர்கள் நாட்டுக்கு வந்து இனங்களுக்கிடையில் பிரச்சினையை ஏற்படுத்தவா? நல்லிணக்கத்தைg இல்லாமல் செய்யவா என விசாரிக்கப்பட வேண்டும். இதுதொடர்பில் அரசாங்கத்தின் கொள்கை என்ன என்பதை நாங்கள் அறிந்துகொள்ள விரும்புகிறோம்.
இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டாரவின் முகப்புத்தகத்தில், ஊடகவியலாளர்களின் இஸ்ரேல் விஜயம் தொடர்பில் குறிப்பொன்றை பதிவிட்டிருக்கிறார். இதில் கலந்துகொள்ள வெளிவிவகார அமைச்சு அவருக்கு அனுமதி வழங்கி இருக்கிறதா என எங்களுக்கு தெரியாது.
அவரது குறிப்பில், புதுடில்லி இஸ்ரேல் தூதரகத்தினால் தெரிவு செய்யப்பட்ட இந்த குழுவினர், இஸ்ரேலின் வெளிவிவகார அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சை பார்வையிடவும் காஸாவில் மேற்கொள்ளப்படும் மனிதாபிமான நடவடிக்கைகளை பார்வையிட இருக்கின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் காஸாவில் மனிதாபிமான நடவடிக்கைகளையா மேற்கொள்கிறது?
அதனால் அரசாங்கத்தின் இஸ்ரேலுக்கான தூதுவரின் இந்த நடவடிக்கை, அரசாங்கத்தின் கொள்கைக்கு முரணானது என்றால், அரசாங்கம் உடனடியாக அவரை நாட்டுக்கு அழைக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால், அரசாங்கத்தின் அனுமதியுடனே இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் இந்த சுற்றுப்பயணத்தில் கலந்துகொண்டுள்ளார். இவர்கள் ஆரம்பத்தில் இருந்து பலஸ்தூனுக்காக செயற்பட்டு வந்தனர். ஆனால் அரசாங்கத்தை அமைத்த பின்னர் இஸ்ரேலுடன் இணைந்து செயற்பட ஆரம்பித்திருக்கின்றனர்.
மனித உரிமை பேரவை கூட்டத்தின்போது, மனித உரிமை ஆணையாளர் உரையாற்றும்போது, பலஸ்தீனில் இடம்பெறும் இனப்படுகொலையை சர்வதேச நாடுகளுக்கு நிறுத்த முடியாமல் போயிருப்பதாகவும் அதனால் அங்கு இடம்பெறும் இனப்படுகொலையை நிறுத்த உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
இவ்வாறான மனிதாபிமானமற்ற செயற்பாடுகளை மேற்கொள்ளும் நாட்டுக்கு எந்த அடிப்படையில் அரசாங்கம் ஊடகவியலாளர்களை அனுப்ப முடியும் என கேட்கிறோம். அதனால் அரசாங்கம் பலஸ்தீன் தொடர்பில் மேற்கொள்ளும் இரட்டை வேடத்தை நிறுத்த வேண்டும். அதேபோன்று ஜனாதிபதி கச்சதீவுக்கு செல்வற்கு பதிலாக அறுகம்பைக்கே சென்றிருக்க வேண்டும். அங்கு இஸ்ரேலியர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM