(எம்.ஆர்,எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
உலகின் எந்த நாட்டோடும் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் வெறும் காகிதங்கள், வார்த்தைகளுக்கு மட்டுப்படுத்தப்படாமல் அவற்றின் மூலம் நாட்டு மக்களுக்கு பிரதிபலன்களை பெற்றுக் கொள்ளும் நிலைமைகள் ஏற்படுத்தப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (09) இடம்பெற்ற இலங்கை குடியரசுக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கும் இடையிலான முதலீடுகள், பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
உலகளாவிய ரீதியில் தற்போதைய நிலைமையில் வர்த்தக ஒப்பந்தங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுகின்றன. இத்தகைய பின்னணியில் நாம் மேற்கொண்டுள்ள இத்தகைய உடன்படிக்கைகள் முக்கியமானவை.
சர்வதேச ரீதியிலும் தேசிய ரீதியிலும் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திர நிலைக்கு கொண்டு வருவது தொடர்பிலேயே விடயங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
மத்திய கிழக்கு நாடுகளை பொறுத்தவரையில் ஐக்கிய அரபு இராச்சியம் எமக்கு மிக முக்கியமானதாகும் என்பதுடன் பல தசாப்த காலங்களாக இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்புகள் காணப்படுகின்றன.
இலங்கையர்கள் மூன்று இலட்சம் பேர் அந்த நாட்டில் வேலை வாய்ப்புகளில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் இத்தகைய ஒப்பந்தங்கள் மூலம் எமது வர்த்தக தொடர்புகள் பலம் பெறுவதுடன் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் வலுவடையும். எமது நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் இத்தகைய உடன்படிக்கைகள் மூலம் முடியும். மேலும் உடன்படிக்கைகளை கைச்சாத்திடவும் முடியும் என்பதுடன் இதற்கு முன்னரும் 27 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் பெரும் சவால்கள் காணப்பட்டாலும் அதற்கான தேவை உள்ளது.
பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கான அரசியல் ஸ்திரத்தன்மை, ஊழல் மோசடிகளை முடிவுக்கு கொண்டு வருதல் மூலம் பல்வேறு நாடுகளுடனும் ஒப்பந்தங்களை மேற்கொள்ள முடியும்.
நம்பிக்கையை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் எமது அரசியல் செயற்பாடுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. அதன் மூலம் நாம் இதற்கு முன்னர் கைச்சாத்திடப்பட்டுள்ள உடன்படிக்கைகளை விட அதிகமான பிரதிபலன்களை பெற்றுக் கொள்ள முடியும்.
அதேபோன்று எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் உடன்படிக்கைகள் காகிதத்திற்கோ அல்லது வார்த்தைகளுக்கோ மட்டுப்படுத்தப்படாமல் நாட்டு மக்களுக்கு பிரதிபலன்களை பெற்றுக் கொடுக்க முடியுமானதாக அமையும்.
எதிர்க்கட்சிகள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தாலும் அரசாங்கம் என்ற வகையில் போதைப்பொருள் கொள்கலன் தொடர்பில் சுயாதீனமான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
நாம் நாட்டு மக்களுக்கு வாக்குறுதி அளித்தது போன்று நாட்டிலிருந்து போதைப் பொருள் வர்த்தகத்தை முற்றாக நிறுத்துவோம்.
இளைய தலைமுறையினரை பாதுகாப்போம் என்று நாம் வாக்குறுதியளித்தோம். அந்த வாக்குறுதியை நாம் நிறைவேற்றுவோம். நாட்டை அழிவுக்கு உட்படுத்தும் அனைத்தையும் நாம் இல்லாதொழிப்போம் என்றார்.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM