கொக்கெய்ன் சம்­ப­வத்­திற்கும் ச.தொ.ச. நிறு­வ­னத்­திற்கும் எந்­த­வி­த­மான சம்­பந்­தமும் இல்­லை­யென கைத்தொழில் மற்றும் வர்த்­தக அமைச்சர் ரிஷாட் பதி­யுதீன் சபையில் தெரி­வித்தார். 

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை வாய்­மூல விடைக்­கான கேள்வி நேரத்தின் போது ஐக்­கிய தேசியக் கட்­சியின் மாத்­தறை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் புத்­திக பத்­தி­ரன எழுப்­பிய கேள்­விக்கு பதி­ல­ளிக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் கூறு­கையில், 

ச.தொ.ச.வை நான் பொறுப்­பேற்ற பின்னர், இந்த நிறு­வ­னம் எந்­த­வொரு பண்­டங்­க­ளையும் இறக்­கு­மதி செய்­ய­வில்லை தனியார் வழங்­குனர்  மூலமே இந்தப் பொருட்கள் இறக்­கு­மதி செய்­யப்­பட்டு வரு­கின்­றன.  

அண்­மையில் சீனிக்­கொள்­க­லனில் கொக்கெய்ன் இருந்­ததை கண்­டு­பி­டித்த ச.தொ.ச. ஊழியர் ­களே பொலி­ஸாரு க்கு தகவல் கொடுத்­தனர்.  இப்­போது அந்­த­ வி­டயம் தொடர்பில் விசா­ரணை இடம் பெற்­று­வரு­கின்­றது. இந்த விசா­ ரணை முடிவு பெறும் வரை, இந்தப் பிரச்­சி­னை­யுடன் சம்­பந்­தப்­பட்ட தனியார் நிறு­வ­னத்­தி­ட­மி­ருந்து ச.தொ.ச. நிறுவனம் எந்தப்

பொருட்களையும் கொள்வனவு செய்வதை, தற்காலிகமாக இடை நிறுத்தியுள்ளது என்றார்.