(எம்.ஆர்.எம் வசீம், இராஜதுரை ஹஷான்)
பெரும்போக விவசாயத்தில் வெள்ளப்பெருக்கால் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில் எழுப்பிய கேள்விகளுக்கு சிறுபோக விவசாயம் முடிவடைந்து, பெரும்போக விவசாயத்துக்காக விவசாய நிலங்கள் தயார்படுத்தப்படுகின்ற போது பதில் கிடைக்கிறது. அமைச்சரால் குறிப்பிடப்பட்ட விடயங்களை ஏற்க முடியாது. குழு ஒன்று அமைத்து இவற்றை ஆராயுங்கள் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (09) நடைபெற்ற அமர்வின் போது அமர்வின் போது கடந்த 2025. பெப்ரவரி மாதம் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் முன்வைத்த கேள்விகளுக்கு விவசாயத்துறை அமைச்சர் லால் காந்த வருமாறு பதிலளித்தார்.
இக்காலப்பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் கிட்டத்தட்ட 83,252 ஏக்கர் நிலம் பாதிக்கப்பட்டு, 70,540 விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்குவதற்காக 7,450 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. 24 மாவட்ட விவசாயிகளுக்கும் நிவாரணமளிக்கப்பட்டுள்ளது என்றார்.
இதனைத் தொடர்ந்து எழுந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், நான் இந்த கேள்விகளை கேட்டு 08 மாதங்களும், 04 நாட்களும் கடந்துள்ள நிலையில் தான் அமைச்சர் பதிலளிக்கிறார். பெரும்போக விவசாயத்தில் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில் கேள்வியெழுப்பினேன்.
தற்போது பெரும்போகம் முடிவடைந்து, சிறுபோகம் விவசாயம் முடிவடைந்து பெரும்போக விவசாயத்துக்காக விவசாய நிலம் தயார்ப்படுத்தப்படுகின்ற நிலையில் தான் தற்போது பதில் கிடைக்கப்பெற்றுள்ளது.
24 மாவட்டங்களுக்கும் நட்டஈடு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிடுகிறார்.ஆனால் கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்கப்படவில்லை.ஆகவே அமைச்சர் குறிப்பிட்ட விடயங்களை ஏற்க முடியாது. குழு ஒன்றை நியமித்து விசாரியுங்கள் என்று வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து எழுந்து உரையாற்றிய அமைச்சர் லால் காந்த,கிளிநொச்சி மாவட்டத்தில் 279 ஏக்கர் நிலப்பரப்பில 139 விவசாயிகள் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்கள். இந்த மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 27 மில்லியன் ரூபாய் வரையில் நட்டஈடு வழங்கப்பட்டுள்ளது.இந்த அறிக்கையை நான் ஏற்கிறேன் என்றார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM