ஆசி­ரி­யர்கள் பணத்தை மையப்­ப­டுத்தி தமது கட­மை­களை செய்யக் கூடாது, மாறாக சேவையை முன்­னி­லைப்­ப­டுத்தி செய­லாற்ற வேண்டும் என வட­மா­காண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரி­வித்­துள்ளார்.

கோப்பாய் ஆசி­ரியர் கலா­சா­லையில் நடை­பெற்ற ஆசி­ரியர் பயிற்­சினை நிறைவு செய்து ஆசி­யர்­க­ளாக நிய­மனம் பெற்ற மலை­யக மாணவ மாண­வி­க­ளுக்­கான பிரி­யா­விடை நிகழ்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றிய போதே இவ்­வாறு தெரி­வித்தார். 

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

இந்த ஆசி­ரியர் கலா­சா­லையில் நீங்கள் அனை­வரும் உங்கள் பயிற்­சி­களை முடித்­து­விட்டு உங்கள் பிர­தே­சங்­களில் ஆசி­ரி­யர்­க­ளாக சேவை­யாற்­ற­வுள்­ளீர்கள். ஆசி­ரியர் என்­ப­வர்கள் சேவை செய்­ப­வர்­களே அன்றி அவர்கள் தொழி­லா­ளிகள் அல்ல. பணம், பொருளை சேக­ரித்துக் கொள்­வ­தற்­காக ஆசி­ரியர் சேவையை நாம் பயன்­ப­டுத்த கூடாது. பணத்தை மையப்­ப­டுத்தி நாங்கள் பணி ஆற்­று­வோ­மானால் எங்­க­ளுக்கும் ஏனைய தொழில் செய்­ப­வர்­க­ளுக்கும் வேறு­பாடு இல்­லாமல் போய்­விடும். பணம் எல்­லோ­ருக்கும் அசி­வ­ய­மா­ன­தொன்­றுதான் ஆனால் அதற்­காக ஆசி­ரி­யர்கள் அதனை தெரிவு செய்தல் ஆகாது.

நல்­ல­தொரு ஆசி­ரி­ய­ராக பணி­யாற்ற வேண்­டு­மானால் சான்­றி­தழ்கள் மட்டும் போதாது. திறமை, புலமை, அறிவு இருக்க வேண்டும் அதுவும் போதாது. இவற்­றுக்கு மேலாக சிநே­க­பூர்­வ­மான அன்பு இருக்க வேண்டும். மாண­வர்கள் மத்­தியில் நீங்கள் பணி ஆற்றும் போது அன்பு, இரக்கம் உள்­ளிட்ட நற்­பண்­புகள் இருக்க வேண்டும். அன்பும் அறிவும் கலந்து இருந்தால் மட்­டுமே உங்­களால் நல்ல சேவை­யினை வழங்க முடியும். 

கல், மண், இரும்பு போன்­ற­வற்­றுடன் நாம் வேலை செய்­வது மிகவும் கடி­ன­மான விடயம் அல்ல. ஆனால் ஆறு அறிவு படைத்த மனி­த ­னுடன் வேலை செய்­வது கடி­ன­மான விடயம் அதற்கு அன்பும், அறிவும் அவ­சி­ய­மா­னது.  எனது அம்­மாவும் அப்­பாவும் தேயிலைத் தோட்­டத்­திலே வேலை­செய்­த­வர்கள் அந்த காலப்­ப­கு­தி­யிலே நான் தமிழ் பேச கற்­றுக்­கொண்டேன் இன்று வட மாகா­ணத்தில் ஆளு­ந­ராக பணி­பு­ரி­வ­தற்கு அது மிகவும் எனக்கு உத­வி­யாக இருக்­கின்­றது என்றார்.