நடிகர் ஜித்தன் ரமேஷ் வெளியிட்ட' பெண் கோடு ' ( Pen Code)திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

09 Sep, 2025 | 03:54 PM
image

மலையாள நடிகர் அருண் சாக்கோ- சரீஷ் தேவ் ஆகிய இருவரும் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் 'பெண் கோடு' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான ஜித்தன் ரமேஷ் வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இயக்குநர் அருண் ராஜ் பூத்தனல் எழுதி இயக்கும் இந்த திரைப்படத்தில் அருண் சாக்கோ, சரீஷ் தேவ், லட்சுமி சாந்தா,  சோனா, திரவிய பாண்டியன், கார்த்திகா ஸ்ரீராஜ், உன்னி காவியா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அருண் ராஜா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தினேஷ் பாண்டியன் இசையமைத்துள்ளார். கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஆஸ்த்திரியா மூவி புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜே என் கே எல் கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் பிரவீதா ஆர். பிரசன்னா,  நித்ய காசி லட்சுமி ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' ஆணும், பெண்ணும் ஒன்றல்ல . இரண்டும் வெவ்வேறானவை. பெண்களுக்கென சில பிரத்யேகமான எண்ணங்கள் உண்டு. அதனை தெரிந்து கொள்வதற்காக நாயகன் அவர்களின் உலகத்தில் ஊடுருவுகிறான். இதனை மையப்படுத்தி தான் இந்த 'பெண் கோடு' எனும் திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது''  என்றார்.

தமிழ் - மலையாளம் என இரு மொழிகளிலும் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தினை எதிர்வரும் நவம்பர் மாதத்தில் வெளியிடுவதற்கான திட்டமிடல் நடைபெற்று வருவதாக படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுறைகளை கடந்து தேசிய விருதுகளை தொடர்ந்து...

2026-07-20 15:16:17
news-image

நமீத் மல்ஹோத்ராவின் தயாரிப்பில் உருவான 'ராமாயணம்...

2026-07-20 15:14:32
news-image

தொழில் முனைவோராக உயர்ந்திருக்கும் நடிகை சாக்ஷி...

2026-07-20 15:12:10
news-image

மூன்று இந்திய தேசிய விருதுகளை வென்ற...

2026-07-20 14:23:11
news-image

இணைய தொடர்களுக்கான சிறந்த இசையமைப்பாளர் விருதை...

2026-07-20 14:21:06
news-image

ஜீ வி பிரகாஷ் குமாருக்கு பாடகர்...

2026-07-20 14:18:49
news-image

நடிகர் விஜய் நடிக்கும் 'ஜன நாயகன்'...

2026-07-18 17:41:45
news-image

சரணடைய மறுக்கும் ஒரு பெண்ணின் உறுதியை...

2026-07-18 17:39:20
news-image

லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் 'மிஸ்டர் பாரத்'...

2026-07-18 17:35:32
news-image

நடிகர் டி. அண்டனி நடிக்கும் 'ஏன்...

2026-07-18 17:32:38
news-image

ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவித்த 'இதயம்...

2026-07-18 16:07:53
news-image

ரசிகர்களின் வரவேற்பை பெற்று வரும் 'சிவ...

2026-07-18 16:05:50