புதிய பிரதமரை தேடுகிறார் மக்ரோன்

Published By: Digital Desk 3

09 Sep, 2025 | 02:48 PM
image

பிரான்ஸில் புதிய அரசியல் நெருக்கடி எழுந்துள்ள நிலையில் பிரதமர் பதவியிலிருந்து பிரான்காய்ஸ் பேரோ விலகியுள்ளார்.

அந்நாட்டு பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (08) நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பேரோவுக்கு போதிய ஆதரவு இல்லாததால் அவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் 364 பேர் பேரோவுக்கு எதிராகவும் 194 பேர் ஆதரவாகவும் வாக்களித்தனர்.

பேரோவின் வரவுசெலவுத் திட்டம் அவரது கூட்டணிக் கட்சிகளிடையே சரியாக வரவேற்கப்படவில்லை. அது அவருக்குப் பாதகமாக அமைந்தது.

பேரோவின் பதவி விலகலை ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் செவ்வாய்க்கிழமை (09) ஏற்றுக்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டது.

மக்ரோன் அடுத்த பிரதமராக யாரைத் தெரிவு செய்வது என்ற குழப்பமான சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளார்.  மக்ரோனின் பதவிக் காலத்தில் இதுவரை ஆறு நபர்கள் பிரதமராகப் பொறுப்பு வகித்தனர். தற்போது அவர் ஏழாவது நபரைத் தேடுகிறார்.

இன்னும் சில நாட்களில் மக்ரோன் அடுத்த பிரதமரைத் தெரிவு செய்வார் என பிரான்ஸ் ஜனாதிபதி அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதையடுத்து பிரதமர் பதவிக்கான பொதுத் தேர்தல் நடக்காது என்பது உறுதியாகியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது...

2026-07-22 16:20:06
news-image

டெல்லியில் “கரப்பான் பூச்சி ஜனதா கட்சி”யினரால்...

2026-07-22 16:33:45
news-image

டெல்லி போராட்டம் : கைது செய்யப்பட்ட...

2026-07-22 11:57:27
news-image

அசாமில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ; கடந்த...

2026-07-22 11:13:45
news-image

Godzilla vs. Kong திரைப்படப் புகழ்...

2026-07-22 11:02:41
news-image

புதுடெல்லியில் பரபரப்பு: பிரதமர் மோடி இல்லம்...

2026-07-22 09:39:58
news-image

இந்தியாவில் சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து:...

2026-07-21 17:00:50
news-image

15 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்குச் சமூக ஊடகங்களை...

2026-07-21 15:50:13
news-image

கயானா படகு விபத்து; 27 பேரின்...

2026-07-21 11:41:07
news-image

கிழக்கு ஆப்கானிஸ்தானில் கனமழை, வெள்ளப்பெருக்கு; 20...

2026-07-21 10:34:42
news-image

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் -...

2026-07-21 10:32:37
news-image

வியட்நாமில் நடுவீதியில் தீப்பற்றி எரிந்த பஸ்...

2026-07-21 10:17:03