'' காணா­மல்­போ­னோரின் உற­வு­களின் கண்­ணீரை துடைக்க அரசு நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும் ''

Published By: Priyatharshan

29 Jul, 2017 | 12:00 PM
image

காலத்தை கடத்திக் கொண்­டி­ருக்­காமல் ஏதா­வது ஒரு பொறி­மு­றையை முன்­னெ­டுத்து காணா­மல்­போ­னோரின் உற­வி­னர்­களின்  கண்­ணீரைத் துடைப்­ப­தற்கு அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும்.  காணாமல்போனோ­ருக்கு பதி­ல­ளிப்­ப­தற்­கான  கடப்­பாட்டை அர­சாங்கம் புறக்­க­ணித்து செயற்­ப­ட­மு­டி­யாது என்று  காணா­மல்­போனோர் தொடர்­பாக விசா­ரணை நடத்­திய  ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின்  முன்னாள் தலைவர்   ஓய்வு பெற்ற நீதி­பதி மெக்ஸ்வல் பர­ண­கம தெரி­வித்தார். 

காணா­மல்­போ­னோரின் உற­வி­னர்கள்   முகம்­கொ­டுக்கும் நெருக்­க­டிகள்,  வேத­னைக்­கு­ரி­ய­வை­யாகும்.   அந்த மக்­களின் துய­ரங்­க­ளுக்கு விடி­வு­கா­ண­வேண்­டி­யது அவ­சியம்.  மேலும் காலத்தை கடத்­திக்­கொண்­டி­ருக்­காமல்  ஒரு பொறி­மு­றையை அவ­ச­ர­மாக முன்­னெ­டுக்­க­வேண்­டி­யுள்­ளது என்றும் அவர் சுட்­டிக்­காட்­டினார். 

காணா­மல்­போனோர் தொடர்­பாக ஆராயும்  அலு­வ­ல­கத்தை   நிறு­வு­வ­தற்­கான சட்­டத்தில்   ஜனா­தி­பதி கைச்­சாத்­திட்­டுள்­ளமை  மற்றும்   முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ  அந்த சட்­டத்தை கடு­மை­யாக எதிர்த்­துள்­ளமை தொடர்பில் விப­ரிக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.  

மெக்ஸ்வல் பர­ண­ம­கம இந்த விடயம் குறித்து மேலும் குறிப்­பி­டு­கையில்:- 

நாம் எமது ஆணைக்­கு­ழுவின் ஊடாக விசா­ர­ணை­களை நடத்­தி­ய­போது ஆயி­ரக்­க­ணக்­கான முறைப்­பா­டுகள் வந்­தன. அந்த முறைப்­பா­டுகள் தொடர்பில் விசா­ரிப்­ப­தற்­காக  எமது ஆணைக்­கு­ழு­வா­னது  ஒரு விசா­ர­ணைக்­கு­ழுவை நிய­மித்­தது. அந்த விசா­ர­ணைக்­குழு பல்­வேறு இடங்­க­ளுக்கும் சென்று விசா­ர­ணை­களை நடத்­தி­யது.  

எனினும் எமக்கு  கால அவ­காசம் போது­மா­ன­தாக இல்­லா­மை­யினால் இந்த செயற்­பாட்டை  பூர­ணப்­ப­டுத்த முடி­ய­வில்லை.   எமது  பரிந்­து­ரை­களில் நாம் பல்­வேறு முக்­கி­ய­மான விட­யங்­களை முன்­வைத்­தி­ருந்தோம். அதில்  காணாமல் போனோர் பிரச்­சி­னைக்கு தீர்­வு­கா­ணப்­ப­ட­வேண்­டு­மென்றும்  உண்­மையை  கண்­ட­றியும் ஆணைக்­குழு நிய­மிக்­கப்­ப­ட­வேண்­டு­மென்றும் பரிந்­துரை செய்­தி­ருந்தோம். 

தற்­போது காணா­மல்­போனோர் அலு­வ­லகம் ஒன்றை  அமைப்­ப­தற்­கான சட்டம் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது. அதற்கு எதிர்ப்­புக்­களும்  எழுந்­துள்­ளன. எனினும்  ஏதா­வது ஒரு பொறி­மு­றையை முன்­னெ­டுத்து   இந்த காணா­மல்­போனோர் பிரச்­சி­னைக்கு தீர்­வு­கா­ணப்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். காணா­மல்­போனோர் விவ­காரம் தொடர்பில் ஆராய்ந்து மக்­க­ளுக்கு பதி­ல­ளிக்­க­வேண்­டி­யது அர­சாங்­கத்தின் கட­மை­யாகும். 

காணாமல் போயி­ருப்போர் எமது நாட்டின் பிர­ஜைகள்.  எனவே அந்த விட­யத்தில்  அர­சாங்­கத்தின் பொறுப்பை   புறக்­க­ணித்து செயற்­ப­ட­மு­டி­யாது.  காணா­மல்­போ­னோ­ருக்கு என்ன நடந்­தது அவர்கள் உயி­ருடன் இருக்­கின்­ற­னரா? இல்­லையா  என்­பது தொடர்பில் கண்­டு­பி­டித்து அவர்­களின் உற­வி­னர்­க­ளுக்கு   உண்­மையை வெளிப்­ப­டுத்த வேண்­டி­யது அர­சாங்­கத்தின் கட­மை­யாகும்.  

இந்த பொறுப்­பி­லி­ருந்து அர­சாங்கம் விலக முடி­யாது.  மக்­க­ளுக்கு நீதியைப் பெற்­றுக்­கொ­டுக்­க­வேண்டும்.  ஒருவர் இறந்­து­விட்டால் சம்­பந்­தப்­பட்ட  குடும்பம்   அடுத்த கட்ட நட­வ­டிக்­கையை எடுக்கும். ஆனால்  காணா­மல்­போனோர்   ஒருவர் தொடர்பில் இவ்­வாறு எதுவும் செய்ய முடி­யாது. உயி­ருடன் இருக்­கின்­றாரா? இல்­லையா? என்­பது கூட தெரி­யாமல் உற­வி­னர்கள் திண்­டா­டிக்­கொண்­டி­ருக்­கின்­றார்கள். 

இது­தொ­டர்பில் அர­சாங்கம் கவ­னத்­தில்­கொள்­ள­வேண்டும்.  காணா­மல்­போனோர்  விட­யத்தில் அர­சாங்கம் என்ன செய்­கின்­றது என்­பதை சர்­வ­தே­சமும் பார்த்­துக்­கொண்­டி­ருக்­கின்­றது.  மக்­களின் வேத­னையை உணர்ந்­து­கொள்­ள­வேண்டும்.  காணாமல் போன தமது உற­வுக்கு என்ன நடந்­தது என்­பதே தெரி­யாமல் இருப்­ப­தா­னது  கொடூ­ர­மான நிலை­யாகும்.  எனவே ஒரு முறை­யான விசா­ரணை   பொறி­முறை அவ­சி­ய­மாகும். 

அத­னூ­டாக இந்தப் பிரச்சினைக்கு தீர்வைக் காண முன்வரவேண்டும். மாறாக  இந்தப் பிரச்சினையை  தொடர்ந்து இழுத்தடிக்கொண்டு இருப்பது முறையானதல்ல.  எமது ஆணைக்குழு முடியுமானவரை நடவடிக்கைகளை மேற்கொண்டது. எமக்கு ஆயிரக்கணக்கான எழுத்துமூல முறைப்பாடுகள் கிடைத்தன. ஆனால்  எமக்கு  காலம் போதுமானதாக இருக்கவில்லை. இன்னும் ஒருவருடகாலம் எமக்கு வழங்கப்பட்டிருந்தால்  காணாமல்போனவர்களுக்கு என்ன நடந்தது என்பதை எம்மால் கண்டுபிடித்திருக்கலாம் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41